Parenting Tips : பெற்றோர்களே உங்க குழந்தை அதிக நேரம் போன் யூஸ் பண்றாங்களா..? அப்ப உடனே 'இத' செய்ங்க..

Kids Screen Time Guidelines For Parents   :  இந்த கட்டுரையில் கண்களை எவ்வாறு பராமரிப்பது எப்படி மற்றும் குழந்தைகளுக்கு மொபைல் ஃபோன் கொடுக்கும் நேரம்  எவ்வளவு  என்பதை தெரிந்து கொள்ளலாம்.

parenting tips how to get rid of mobile addiction for kids in tamil mks

இன்று பெரும்பாலான குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்று நண்பர்களுடன் விளையாடுவது, அவர்களுடன் நேரத்தை செலவிடுவது போன்றவற்றுக்கு பதிலாக, ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி ஆகியவற்றில் நேரத்தை செலவிட விரும்புகிறார்கள். ஆனால், இப்படி நீண்ட நேரம் திரையின் முன் இருந்தால் குழந்தையின் கண் மற்றும் மூளையின் செயல்பாடு மோசமாக பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல திரையின் முன் அதிக நேரம் செலவிடுபவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். ஆனால் இந்த பிரச்சனையை சமாளிக்க சில விஷயங்களை மட்டும் பின்பற்றினால் போதும். எனவே, இந்த கட்டுரையில் கண்களை எவ்வாறு பராமரிப்பது எப்படி மற்றும் குழந்தைகளுக்கு மொபைல் ஃபோன் கொடுக்கும் அவர்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

குழந்தையின் திரை நேரம் எவ்வளவு?:

ஆய்வு ஒன்றில், குழந்தைகளின் உடல் செயல்பாடு, திரை நேரம் மற்றும் தூக்கம் ஆகியவை ஆராயப்பட்டது. அதில் 2 மணி நேரத்திற்கு மேல் திரையின் முன் இருப்பது குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சியை பாதிக்கிறது என்று ஆராய்ச்சியில் தெரியவந்தது. 

மேலும் குழந்தைகளுக்கு ஸ்கிரீனிங் டைம் அவசியமில்லை. எனவே, முடிந்த அளவிற்கு அவர்களை டிவி, மொபைல் ஃபோனில் இருந்து விலகி வையுங்கள். இது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை ஆகும். ஒரு வேலை ஸ்கிரீனிங் டைம் தேவை என்றால், ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டும் குழந்தைகளுக்கு கொடுங்கள். 

இதையும் படிங்க:   Parenting Tips : ஒரு குழந்தையின் பெற்றோருக்கான பெஸ்ட் அட்வைஸ்..!

குழந்தைகள் அதிக நேரம் திரையில் இருந்தால் ஏற்படும் பிரச்சனைகள்:

  • குழந்தைகள் அதிக நேரம் திரையில் இருந்தால் மன இறுக்கத்தின் அறிகுறிகள் அவர்களிடம் உருவாகும்.
  • மேலும், எதிர்காலத்தில் மனசோர்வு மற்றும் பதட்டத்தின் அறிகுறிகள் விரைவில் அவர்களிடம் காணப்படும்.

இதையும் படிங்க:  Parenting Tips : குழந்தைகள் கீழ்ப்படிய வேண்டுமா..? அப்ப முதல்ல இந்த விஷயங்களை சொல்லிக் கொடுங்கள்..

இவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள்:

  • கண்ணாடி அணிந்திருக்கும் நபர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக கண் பரிசோதனை செய்ய வேண்டும்.
  • நீங்கள் கம்ப்யூட்டரில் அதிகம் வேலை செய்கிறீர்கள் என்றால் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது 20 நிமிஷம் உங்கள் கண்ணிற்கு ஓய்வு கண்டிப்பாக கொடுக்க வேண்டும். முக்கியமாக நீங்கள், Lubricant Eye Drops மற்றும் Anti Reflective Coating Glasses பயன்படுத்த வேண்டும்.
  • மேலும் அதிக சத்துக்கள் நிறைந்துள்ள காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இரவு நேரத்தில் மொபைலில் வெளிச்சத்தை குறைத்து வைத்து பயன்படுத்தக் கூடாது. மேலும் மங்கலான வெளிச்சத்திலோ (அ) நடந்தோ படிக்கக் கூடாது. இதனால் விரைவில் பார்வை குறைபாடு ஏற்படும்.
  • அதுபோல இரவு தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் மொபைல் போன், டிவி, லேப்டாப் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios