மழைக்காலத்தில் வீட்டின் உட்புற சுவர்களில் ஈரமாக இருக்கிறது என்றால், அதை சரிசெய்ய சில வழிகள் இங்கே.
மழைக்காலத்தில் வீட்டின் உட்புற சுவர் ஈரமாவது சகஜம் தான். உங்கள் வீட்டிலும் இந்த பிரச்சினையை நீங்கள் சந்திக்கிறீர்கள் என்றால், சில குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் வீட்டின் சுவற்றில் இருக்கும் ஈரப்பத பிரச்சனையே பெருமளவில் குறைத்து விடலாம். அது என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மழை காலத்தில் சுவர் ஈரமாவது ஏன்?
மழை காலத்தில் சுவற்றில் ஈரப்பதம் வருவதற்கு காரணம், சுவர்கள் அல்லது கூடையில் ஒரு சிறிய விரிசல் இருப்பதாகும். காரணமாக சுவற்றில் பூஞ்சை வளர தொடங்கும். இது மாதிரி நீங்கள் கண்டால் அதை புறக்கணிக்காமல் உடனே ஒரு பிளம்பரை அழைத்து சரி செய்துவிடுங்கள். ஏனென்றால் கசிவு சரி செய்யப்படும் வரை ஈரப்பத பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
வீட்டுக்குள் சூரிய ஒளி
காற்று மற்றும் சூரிய ஒளி தான் ஈரப்பதத்தின் மிகப்பெரிய எதிரி. மழைய காலத்தில் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடுகிறோம். இது வீட்டிற்குள் காற்றின் சுழற்சியை குறைக்கிறது. எனவே மழை நின்ற பிறகு உங்கள் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்தால் வீட்டிற்குள் புதிய காற்று மற்றும் சூரிய ஒளி வரும். இதனால் வீட்டிற்குள் ஈரப்பதம் குறையும்.
மின் விசிறி
சமையலறை மற்றும் குளியலறையில் அதிக ஈரப்பதம் இருக்கும். எனவே சமைத்து முடித்த பிறகு மற்றும் குளித்த பிறகு மின்விசிறி இயக்க மறக்காதீர்கள். இது ஈரப்பதத்தை அகற்ற பெரிதும் உதவும். ஒருவேளை உங்களது வீட்டில் ஈரப்பத பிரச்சனை அதிகமாக இருந்தால் ஒரு ஈரப்பதம் மூட்டியை வாங்கி வைக்கலாம். இது காற்றில் இருந்து அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி வீட்டை உலர்த்தும்.
இதை ஓரங்கட்டு
சோபா, பீரோல், டேபிள் போன்ற பிற பொருட்கள் சுவர்களுக்கு அருகில் வைத்தால் ஈரப்பதம் மேலும் அதிகரிக்கும். ஏனெனில் அவற்றிற்கு பின்னால் காற்று சுழற்சி இருக்காது. எனவே இதுபோன்ற சூழ்நிலையில் அவற்றை சுவர்களில் இருந்து சுமார் இரண்டு முதல் மூன்று அங்குலம் தள்ளி வையுங்கள். இதனால் காற்று அங்கு சென்று சுவர்களில் ஈரப்பதம் குவிவதை தடுக்கும்.
உப்பு மற்றும் வேப்ப இலை
இவை இரண்டும் ஈரப்பதம் மற்றும் பூஞ்சையை எதிர்த்து போராடும். இதற்கு ஒரு கிண்ணத்தில் கல் உப்பை நிரப்பி அதை ஈரப்பதம் அதிகம் உள்ள இடத்தில் வைக்கவும். உப்பு காற்றில் இருந்து ஈரப்பதத்தை எளிதாக உறிஞ்சி விடும். பிறகு அது ஈரப்பதமாகும்போது மாற்றி விடுங்கள். அதுபோல வேப்ப இலை அல்லது வேப்ப எண்ணெய்யும் பூஞ்சை வளர்ச்சியை தடுக்க உதவும்.
