எவ்வளவு சாப்பிட்டாலும் இரத்தக் குழாய்களில் கொழுப்பு சேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?  

மாறிவரும் கலாச்சாரத்திற்கு ஏற்ப உணவு பழக்க வழக்கத்திலும் நாம் மாற்றம் கொண்டு வந்து விட்டோம். அதற்கு ஏற்றவாறு பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். அதனை சரி செய்வதற்கு இளம் வயதில் சேர்த்து வைத்த அனைத்து சொத்தையும், 40... 50 வயதை கடக்கும் போது கொஞ்சம் கொஞ்சம் குறைய வைக்கும்.

காரணம்... சிகிச்சை. ஆனால் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இன்று நாம் எப்படி இருக்கிறோம்? எது பிடிக்கிறதோ அதை சாப்பிடுகிறோம்? ருசியாக இருந்தால் மட்டுமே போதும் என நினைக்கிறோம். ஆனால் அதற்கு பின் உள்ள விளைவுகளைப் பற்றி என்றும் எப்போதும் நாம் கவலைப் பட்டதே கிடையாது.

12 ராசியினரில் "கொடுத்த வாக்கை காப்பாற்ற போகும் நபர்" யார் தெரியுமா..?

அந்த ஒரு விஷயத்தில் நாம் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், அதிகரித்து வரும் இதய அடைப்பு. இதன் காரணமாக இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய காரணம் உணவு பழக்க வழக்கம், இடைவெளியில்லாமல் எப்போதும் வேலை வேலை என இருந்து மன அழுத்தத்திற்கு உள்ளாவது என சொல்லிக்கொண்டே போகலாம்.

இருந்தபோதிலும் ஒருசில உணவுப் பொருளை சமைக்கும் போது சரியாக சேர்த்துக் கொண்டால் எவ்வளவு நாம் சாப்பிட்டாலும் ரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்வதை சற்று குறைக்க முடியும். அந்த வகையில் வெங்காயம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அது பெரிய வெங்காயமாக இருந்தாலும் சரி, சிறிய வெங்காயமாக இருந்தாலும் சரி. இரண்டு வெங்காயமுமே முக்கியமான ஒன்று.

ரத்தத்தில் கொழுப்பு அதிகரித்தால், ரத்த அழுத்தம் வரும், இதய தசைகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கும், இதன் காரணமாக இதயத் தசைகள் பாதிப்படைந்து மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டமும் குறையத் தொடங்கும், பின்னர் நரம்புத்தளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனைத்தொடர்ந்து நுண்கிருமிகளால் சிறுநீர்ப்பாதை மலக்குடலில் வலி ஏற்படும்.உடம்பில் ஏற்படும் நுண்கிருமிகளின் தொற்று, வி­க்கடிகள் போன்றவற்றால் புரோ ஸ்டோகிளாண்டின் என்னும் பொருள் அதிகரித்து உணர்வு நரம்புகளை பாதிக்கின்றன.

ரத்தத்தில் அதிகரித்து காணப்படும் யூரிக் அமிலம் எலும்பு இணைப்புகளை பெரிதும் பாதித்து அதனால் வலி ஏற்படுவதுடன் சிறுநீர்ப் பாதையில் யுரிக் அமிலக் கற்களையும் உண்டு செய்து மிகுந்த வலியை கொடுக்கும். எனவே இதனை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் உணவுப் பொருட்களில் வெங்காயம் சற்று கூடுதலாக சேர்த்து பயன்படுத்துவது நல்லது.