12 ராசியினரில் "கொடுத்த வாக்கை காப்பாற்ற போகும் நபர்" யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

உங்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பழைய நண்பர் ஒருவர் ஓடோடி வந்து உதவி செய்வார். முக்கிய புள்ளிகள் உங்களை சந்தித்து பேசுவார்கள். கல்யாண முயற்சிகள் கைகூடும்.

ரிஷப ராசி நேயர்களே...!

கூட்டாளிகளிடம் யோசித்துப் பேசுவது நல்லது. உங்களுக்கு வெளியிடத்தில் இருந்து வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். நாளுக்கு நாள் நம்பிக்கை அதிகரிக்கும்.வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மிதுன ராசி நேயர்களே...!

மூத்தோர்களின் சந்திப்பு மகிழ்ச்சி கொடுக்கும்.எதிர்பார்த்த பணவரவு இருக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். பெற்றோர்கள் உதவி செய்ய முன் வருவார்கள். வாகன மாற்றம் குறித்து சிந்திப்பீர்கள்.

கடக ராசி நேயர்களே...!

பொதுவாழ்க்கையில் ஈடுபடுவீர்கள். புகழ் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பாதியில் நின்ற வேலைகள் முடியும்.

சிம்மராசி நேயர்களே...!

மதிப்பும் மரியாதையும் நாளுக்கு நாள் உயரும். விரைவில் திருமணம் நடைபெறும். எடுத்த காரியத்தை எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். அரசியல் செல்வாக்கு உயரும்.

கன்னி ராசி நேயர்களே...!

ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சில நாட்களாக செய்ய முடியாத காரியம் ஒன்று நடக்கும்.  
ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீரென பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

துலாம் ராசி நேயர்களே...! 

வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். அனுபவமிக்க நபர்களின் பேச்சை கேட்பதால்  உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் தேடிவரும். எதிர்பார்த்த பணவரவு அதிகரிக்கும்

விருச்சக ராசி நேயர்களே...!

நல்ல வாய்ப்பு உங்களை தேடி வரும். நண்பர்கள் ஓடோடி வந்து உதவி செய்வார்கள். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

கயிறு கட்டிலில்... துடிதுடிக்கும் பிரசவ வலியில் கர்ப்பிணி பெண்..! அடர்ந்த காட்டு பகுதியில்.. 6 கிமீ .. திக் திக்.. அடுத்து நடந்தது என்ன..?

தனுசு ராசி நேயர்களே...!

கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். எதையும் எதிர்பார்க்காமல் நீங்கள் செய்த உதவிக்கு பிரதி பலன் கிடைக்கும் நாள் இது.

மகர ராசி நேயர்களே...!

வீண் செலவு ஏற்படலாம். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்குவீர்கள். கடந்த இரண்டு நாட்களாக இழுபறியாக இருந்து வந்த வேலை நிறைவடையும்.

கும்ப ராசி நேயர்களே...!

வெற்றிகள் வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மாறும். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. அயல்நாட்டிலிருந்து நல்ல தகவல் வரும்.

மீனராசி நேயர்களே...!

ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். அதிகார பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். திருமண வாய்ப்புகள் தேடி வரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.