Asianet News TamilAsianet News Tamil

நம் வீட்டிலேயே ரெடியா இருக்கு "பேஸ் வாஷ்" ..! வெளியில் எங்கும் வாங்க வேண்டாம்..!

20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். வாரம் 3 முறை பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகலும்... முகம் பொலிவு பெரும்.. எந்த பக்க விளைவுகளும் கிடையாது.
 
how to prepare facewash in herabal method
Author
Chennai, First Published Feb 5, 2020, 4:02 PM IST

நம் வீட்டிலேயே ரெடியா இருக்கு "பேஸ் வாஷ்" ..! வெளியில் எங்கும் வாங்க வேண்டாம்..!   

நம் முக அழகை பேணி காக்க எத்தனையோ முயற்சியை  மேற்கொள்வோம்.. ஆனால்  அதன் பக்க விளைவுகள் பற்றி சிந்திப்பதே கிடையாது. இது போன்று பல மெடிசின் மற்றும் கிரீம் பயன்படுத்துபவர்கள் இதற்காக மட்டும் தனி தொகையை ஒதுக்கி விடுகிறார்கள். ஒரு முறை பயன்படுத்த தொடங்கி விட்டால்... அதனை தொடர்ந்து பயன்படுத்தினால் மட்டுமே முக அழகை பராமரிக்க முடியும். ஆனால் இதற்கெல்லாம்  மாற்று விதமாக இயற்கையாகவே வீட்டில் தயாரிக்கும் ஹெர்பல் பொடியை பயன்படுத்தினால் நம்முடைய முக அழகை பராமரிப்பது மட்டுமல்லாமல், எந்த கெடுதலும் வராமல் பார்த்துக்கொள்ளலாம்.

how to prepare facewash in herabal method

முகத்தில் உள்ள கருமையை நீக்கி பொலிவு பெற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் செய்ய தேவையான பொருள்கள் 

அரிசி மாவு - அரை கப், பச்சை பயறு மாவு - அரை கப், கடலைமாவு - அரை கப், ஓட்ஸ் பவுடர் - அரை கப், இந்த 4 பொருட்களை ஒரு பவுலில் போட்டு நன்றாக கலந்து வைத்து கொண்டு... தேவையான அளவு பவுடரை எடுத்து, ரோஸ் வாட்டருடன் கலந்து முகத்தில் தேய்த்து, 1 நிமிடம் மசாஜ் செய்து கழுவவும் .இதையே ஃபேஸ் பேக்காகவும் போட்டு கொள்ளலாம். 

20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். வாரம் 3 முறை பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகலும்... முகம் பொலிவு பெரும்.. எந்த பக்க விளைவுகளும் கிடையாது.

எனவே மிக எளிதாக இருக்கக்கூடிய இந்த மெத்தட் மூலம் இனி முயற்சி செய்து பாருங்கள். கட்டாயம் நல்ல ரிசல்ட் கிடைக்கும். 

Follow Us:
Download App:
  • android
  • ios