இந்த 2 பொருள் போதும் வீட்டிலேயே விக்ஸ் ரெடி...இனி சளி, இருமல் மற்றும் மூக்கடைப்பு இருக்காது...!!
இருமல், சளி, ஜலதோஷம், மூக்கடைப்பு நாம் பயன்படுத்தும் விக்ஸ் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ஜலதோஷம், மூக்கடைப்பு மற்றும் இருமல் போன்றவை பருவகால பிரச்சனைகள் ஆகும். ஆனால் அது மிகவும் பொதுவானது என்று எண்ணி விட கூடாது. அதற்கும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம். மேலும் பொதுவாக நாம் அனைவரும் இச்சமயத்தில் விக்ஸ் பயன்படுத்துவது உண்டு. அந்த வகையில் நாம் இந்த மாதிரியான பிரச்சினைகளுக்கு கடைகளில் இருந்து வாங்கி பயன்படுத்தும் விக்ஸ், நாம் நமது வீட்டில் இருந்தவாறு தயாரிக்கலாம். அது எப்படி முடியும் என்று உங்களுக்கு தோன்றலாம். கவலையை விடுங்க..அதற்கான செய்முறை குறித்து இங்கு பார்க்கலாம்.
வீட்டிலேயே விக்ஸ் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்:
நெய் - 4-5 ஸ்பூன்
பச்சை கற்பூரம் - 2
கண்ணாடி கன்டெய்னர் - 2
இதையும் படிங்க: ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும் இருமல், சளி தொல்லையிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்..!!
விக்ஸ் தயாரிக்கும் முறை:
வீட்டிலேயே விக்ஸ் தயாரிக்க, முதலில் அடுப்பில் கடாய் வைக்க வேண்டும். கடாய் சூடானதும் நெய் சேர்க்க வேண்டும். பின்னர் கற்பூரம் சேர்த்து கொள்ளுங்கள். கற்பூரம் கரைந்ததும் கடாயை அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள். பின் இவற்றை ஒரு கண்ணாடி கன்டெய்னரில் வைக்க வேண்டும். இப்போது விக்ஸ் ரெடி. அது நன்கு ஆறிய பின் பயன்படுத்தலாம். நீங்கள் இதை முதன்முறையாக பயன்படுத்தும் போது, உங்கள் சருமத்தின் ஒரு பகுதியில் தடவி ஒவ்வாமை இருக்கிறதா என்று அறிந்து கொண்ட பின்னரே பயன்படுத்தவும். முக்கியமாக, இதை நீங்கள் 3 நாட்களுக்கு மேல் பயன்படுத்த கூடாது. மேலும் கற்பூரம் விஷமுள்ளது என்பதால், உணர்திறன் வாய்ந்த சருமம் உடையவர்களுக்கு இது பொருந்தாது. இதை நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்
மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள்.
பாதுகாப்பானதா?
இதுகுறித்து சுகாதார நிபுணர் ஒருவர் கூறுகையில், "கடையில் வாங்கப்பட்டதை விட, இது மிகவும் சிறந்தது மற்றும் நல்லது. இயற்கையாகவே நெய் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இந்த விக்ஸில் நெய் இருப்பதால் இது சருமத்திற்கு மிகவும் பாதுகாப்பானது. மேலும் இதனை குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை பயன்படுத்தலாம். குறிப்பாக சளி, இருமல் உள்ளவர்கள் இதனை மார்பு மற்றும் பாதத்தின் கீழ் பயன்படுத்தலாம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: ஒரே இலை பல பிரச்சனைகளுக்கு தீர்வு.. குப்பைமேனி இலையில் இத்தனை நன்மைகள் இருக்கா?
இருப்பினும், இதுகுறித்துதோல் மருத்துவ நிபுணர் ஒருவர் கூறுகையில், "குழந்தைகளுக்கு கற்பூரம் பயன்படுத்தக்கூடாது என்று எச்சரித்தார். குறிப்பாக இது இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்று ஆராய்ச்சியில் உள்ளது. ஏனெனில், குழந்தைகளுக்கு இது மூச்சுத்திணறல் மற்றும் வலிப்பு ஏற்படுத்தும். மேலும் குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானது என்பதால் அது அவர்களுக்கு தோல் ஒவ்வாமையை ஏற்படுத்தும்" என்று கூறினார்.
சளி மற்றும் மூக்கடைப்புக்கு சிறந்த தீர்வு என்ன?
குழந்தைகளுக்கு சளி மற்றும் மூக்கடைப்பு இருந்தால், அவர்களது நாசியில் சலைன் ட்ராப்ஸ் (saline drops) ஊற்ற வேண்டும். மேலும் அவர்களுக்கு நிறைய தண்ணீர் கொடுக்கலாம். குறிப்பாக அதில் தேன் சேர்க்கலாம். இதுவே சிறந்த தீர்வகும்.