MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • அடிக்கடி போன் ஸ்க்ரோல் பண்றவரா நீங்க? போனை இப்படி பிடிச்சா கை விரல்கள் செயலிழக்கும் அபாயம்!

அடிக்கடி போன் ஸ்க்ரோல் பண்றவரா நீங்க? போனை இப்படி பிடிச்சா கை விரல்கள் செயலிழக்கும் அபாயம்!

தொடர்ந்து ஸ்மார்ட்போனில் மெசேஜ் அனுப்புவது மற்றும் ஸ்க்ரோல் செய்வதால் கை விரல்கள், மணிக்கட்டு மற்றும் தசைனார்களில் ஏற்படும் தீவிர பாதிப்புகள் குறித்து பிரபல எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

2 Min read
Author : Kiruthickraj D
Published : Nov 02 2026, 06:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் கைவிரல் வலி
Image Credit : gemini

ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் கைவிரல் வலி

இன்றைய அவசர உலகத்தில் ஸ்மார்ட்போன் என்பது நம் வாழ்க்கையோடு பிரிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. தூங்கி எழுந்ததில் இருந்து தூங்கப் போகும் வரை பல மணி நேரம் சமூக வலைத்தளங்களைப் பார்ப்பது, மெசேஜ் அனுப்புவது, கேம் விளையாடுவது எனத் தொடர்ந்து பலரும் போனையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். பொதுவாக அதிக நேரம் திரையைப் பார்ப்பதால் கண் பார்வையும், தூக்கமும் பாதிக்கப்படும் என்பதை நாம் அறிந்திருப்போம்.

ஆனால், தொடர்ந்து போனைப் பயன்படுத்துவதால் நம் கை விரல்களுக்கும் மணிக்கட்டுகளுக்கும் ஏற்படும் பாதிப்புகளைப் பலரும் கண்டுகொள்வதே இல்லை என்று எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் எச்சரிக்கின்றனர். தொடர்ந்து ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் கைகள், மணிக்கட்டு மற்றும் விரல்களில் ஏற்படும் தீவிர பாதிப்புகள் குறித்தும், அதைத் தடுக்கும் எளிய பழக்கவழக்கங்கள் குறித்தும் அவர் கூறியவை குறித்து விரிவாக பார்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கை தசைகள் & நரம்புகளுக்கு ஏற்படும் அதிக அழுத்தம்
Image Credit : gemini

கை தசைகள் & நரம்புகளுக்கு ஏற்படும் அதிக அழுத்தம்

மனித கைகளின் அமைப்பு பல வேலைகளைச் செய்வதற்கு ஏற்ப மிக நேர்த்தியாகப் படைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரே மாதிரியான அசைவுகளை இடைவெளியின்றித் தொடர்ந்து செய்யும்போது கைகள், மணிக்கட்டுகளில் உள்ள தசைகள், மூட்டுகள், தசைநார்கள் (Tendons) மற்றும் நரம்புகள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. குறிப்பாக, ஒரே கட்டைவிரலை மட்டுமே பயன்படுத்தி மணிக்கணக்கில் போனை ஸ்க்ரோல் செய்வது, டைப் செய்வது மற்றும் கைகளை ஒரே கோணத்தில் மடக்கி வைத்துக்கொண்டே மெசேஜ் அனுப்புவதுதான் இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

எந்தவொரு ஓய்வும் கொடுக்காமல் கட்டைவிரலை மட்டுமே திரும்பத் திரும்ப இயக்கும்போது, தசைநார்களில் அழற்சி ஏற்பட்டு கடுமையான வலி உருவாகிறது. பலரும் ஒரே கையால் போனைப் பிடித்துக்கொண்டு, 2 விரல்களை மட்டுமே ஆதாரமாக வைத்து ஒரே நிலையில் நீண்ட நேரம் வைத்திருப்பார்கள். இவ்வாறு போனைப் பிடிக்கும் விதம் தவறாக இருக்கும்போது, நாளடைவில் கைகளில் கடுமையான வலி, மரத்துப்போதல் (Numbness) மற்றும் பலவீனம் ஏற்படும்.

இந்த வலி ஒரே நாளில் வந்துவிடுவதில்லை; தொடர்ந்து நாம் கொடுக்கும் சிறு அழுத்தங்கள் காலப்போக்கில் பெரிய மூட்டுப் பிரச்சனையாக உருவெடுக்கிறது. குறிப்பாகக் கம்ப்யூட்டர் வேலை, கேமிங் அல்லது எழுத்துப் பணிகளுடன் சேர்த்து போனையும் தொடர்ந்து பயன்படுத்தும்போது காயம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. பலரும் ஆரம்பத்தில் ஏற்படும் லேசான வலியை அசட்டையாக விட்டுவிட்டுத் தொடர்ந்து போனைப் பயன்படுத்துவதால்தான், அது தீராத நாள்பட்ட வலியாக மாறுகிறது என்கின்றனர்.

34
பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள வழிகள்
Image Credit : gemini

பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள வழிகள்

ஸ்மார்ட்போன் பயன்பாட்டை முழுமையாகக் குறைப்பது எல்லோராலும் உடனடியாக முடியாது என்றாலும், போனைப் பயன்படுத்தும் பழக்கவழக்கங்களில் சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் இந்த அழுத்தத்தைத் தவிர்க்கலாம்: டைப் செய்யும்போதோ அல்லது செயலிகளை இயக்கும்போதோ ஒரு கட்டைவிரலை மட்டும் நம்பியிருக்காமல் இரண்டு கைகளையும் பயன்படுத்த வேண்டும்.

போனை ஒரே பிடியில் வைத்திருக்காமல், கைகளை மாற்றி மாற்றிப் பிடிக்கப் பழகலாம். தொடர்ந்து பயன்படுத்தாமல் அவ்வப்போது சிறிது நேரம் போனை கீழே வைத்துவிட்டு கைகளுக்கும் மணிக்கட்டுகளுக்கும் தகுந்த ஓய்வு கொடுக்க வேண்டும். போனைப் பயன்படுத்தும் போது மணிக்கட்டை அளவுக்கு அதிகமாக மடக்காமல் நேராக வைத்திருக்க வேண்டும்.

போனை மிகவும் இருக்கமாக இறுக்கிப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை; தளர்வாகப் பிடிப்பதே தசைகளுக்கு மிகவும் நல்லது. நீண்ட உரையாடல்களுக்குத் தட்டச்சு செய்வதற்குப் பதிலாக வாய்ஸ் மெசேஜ் (Voice Message) அல்லது வாய்ஸ்-டு-டெக்ஸ்ட் (Voice-to-Text) போன்ற குரல்வழி வசதிகளைப் பயன்படுத்தலாம்.

44
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
Image Credit : gemini

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

போனைப் பயன்படுத்திய பிறகு எப்போதாவது லேசாகக் கை அசதியாக இருப்பது இயல்புதான். ஆனால், தொடர்ந்து வலி நீடித்தாலோ, கை வீக்கம், மரத்துப்போதல், ஊசி குத்துவது போன்ற உணர்வு, பொருட்களைப் பிடிப்பதில் பலவீனம் ஏற்படுதல் அல்லது இரவில் வலியால் தூக்கம் கெடுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்ய வேண்டும். அதேநேரம், கைகளில் வரும் எல்லா வலிகளுக்கும் ஸ்மார்ட்போன் மட்டுமே காரணம் என்று சுயமாக முடிவு செய்துவிடாமல், சரியான மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகின்றனர்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KD
Kiruthickraj D
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
டைல்ஸ்களில் படிந்த பெயிண்ட், சிமெண்ட் கறை: கீறல் விழாமல் சுலபமாக அகற்ற 5 எளிய டிப்ஸ்!
Recommended image2
Fridge Cleaning: பழைய ஃபிரிட்ஜும் இனி புதுசு போல பளபளக்கும்.. ஃபிரிட்ஜ் சுத்தம் செய்ய சிம்பிள் டிப்ஸ்!
Recommended image3
Gas Burner Cleaning: கேஸ் அடுப்பு பர்னர் கருப்பா இருக்கா.? வீட்டில் இருக்கும் இந்த 2 பொருட்கள் போதும்
Related Stories
Recommended image1
சாப்பாடு சாப்பிட்டதும் கேஸ் தொல்லையா? நிபுணர் சொல்லும் இந்த 4 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Recommended image2
டைல்ஸ்களில் படிந்த பெயிண்ட், சிமெண்ட் கறை: கீறல் விழாமல் சுலபமாக அகற்ற 5 எளிய டிப்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved