வீட்டிலேயே ஈஸியா புரோட்டீன் பவுடர் தயாரிக்கலாம்; எப்படி தெரியுமா?

உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கு புரதச்சத்து அவசியம். வீட்டிலேயே எளிதாக புரோட்டீன் பவுடர் தயாரிக்கலாம். கொண்டைக்கடலை மற்றும் வேர்க்கடலையை வறுத்து அரைத்தால் புரோட்டீன் பவுடர் தயார்.

How To make protein powder recipe at home Rya

உடல் எடை அதிகமாக இருப்பது எப்படி உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்குமோ அதே போல், உடல் எடை குறைவாக இருப்பதும் ஆபத்தானது தான். உடல் எடை குறைவாக இருப்பவர்கள் புரதச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவது அவசியம். இதற்காக கடைகளில் புரோட்டீன் பவுடர்கள் கிடைத்தாலும், அவை உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். 
ஆனால் வீட்டிலேயே எளிதாக புரோட்டீன் பவுடர் தயாரிக்கலாம். இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் கால் கப் கொண்டை கடலை சேர்த்து நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே அளவு வேர்க்கடலையை எடுத்து நன்றாக வறுத்து ஆற வைக்க வேண்டும்.
முதலில் வறுத்த கொண்டைக்கடலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

சாப்பிட்டவுடன் சர்க்கரை அளவு ஏன் வேகமாக உயருகிறது? எப்படி கட்டுப்படுத்தலாம்? டாக்டர் சிவபிரகாஷ் விளக்கம்!

அதே போல் வறுத்த வேர்க்கடலையையும் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டையும் கலந்தால் புரோட்டீன் பவுடர் தயார்.

கிரீன் டீ vs இஞ்சி டீ - எந்த 'டீ' எடையை  குறைப்பதில் சிறந்தது? பலரும் அறியா தகவல்

எப்படி குடிப்பது?

இந்த புரோட்டீன் பவுடரை 2 ஸ்பூன் அளவுக்கு எடுத்துஅ தனை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் 3 பேரீச்சம் பழம், ஒரு கிளாஸ் பால், ஒரு வாழைப்பழம் சேர்த்து அரைத்து புரோடீன் மில்க் ஷேக்காக குடிக்கலாம். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios