முடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வு! - கருவேப்பிலை தொக்கு செஞ்சு சாப்பிடுங்க அதுவே போதும்!
கருவேப்பிலை தொக்கு ஒரு முறை செய்தால் ஒரு மாதத்திற்கு சாப்பிடலாம். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த ருசியான கருவேப்பிலை தொக்கை எப்படி செய்வது என இந்தப் பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் அளவிற்கு புளி
இரண்டு கைப்பிடி அளவிற்கு கருவேப்பிலை
தேவையான அளவு எண்ணெய்
அரை ஸ்பூன் வெந்தயம்
சிறிது கடலை பருப்பு
சிறிது உளுந்து
2 ஸ்பூன் வேர்கடலை
ஒரு ஸ்பூன் வரமல்லி
ஒரு ஸ்பூன் சீரகம்
7 வர மிளகாய்
கால் ஸ்பூன் பெருங்காயம்
கொய்யா இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா..??
செய்முறை
முதலில் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவிற்கு புளியை சுடு தண்ணீரில் போட்டு ஊற வைத்து கொள்ளுங்கள். பின்னர், இரண்டு கைப்பிடி அளவிற்கு கருவேப்பிலைகளை நன்றாக கழுவி விட்டு, ஈரம் இல்லாமல் நிழலிலேயே உலர வைக்க வேண்டும்.
பிறகு, அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, வெந்தயம், கடலைப்பருப்பு, உளுந்து, வேர்கடலை, வர மல்லி, சீரகம், வர மிளகாய், பெருங்காயம் இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். எல்லாம் மணக்க மணக்க வாசம் வீசும் வரை வருபட்ட உடன் எண்ணெயிலிருந்து வடிகட்டி இதை தனியாக ஒரு தட்டில் மாற்றி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கடாயில் மீதம் இருக்கும் எண்ணெயில், 2 கைப்பிடி அளவு சுத்தம் செய்து வைத்துள்ள கருவேப்பிலைகளை போட்டு 2 நிமிடம் மட்டும் வதக்கி விட்டால் போதும். மொறு மொறு என்று வருபடக்கூடாது. வதக்கிய கருவாப்பிலையையும் தனியாக ஒரு தட்டில் மாற்றி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அவசர காலை உணவுக்கு ஏற்றது ''தயிர் சாண்ட்விச்''! - ஸ்பீடா செஞ்சு சாப்பிட்டு போயிட்டே இருக்கலாம்!!
பின்னர், சிறிய மிக்ஸி ஜாரை எடுத்து அதில் முதலில் வறுத்த மசாலா பொருட்களை எல்லாம் போட்டு தண்ணீர் ஊற்றாமல் கரடு முரடாக அரைக்க வேண்டும். பின்னர், வதக்கி வைத்திருக்கும் கருவேப்பிலைகளை மசாலா உடன் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக அரைக்க வேண்டும். பிறகு, இந்த சமயத்தில் ஊற வைத்திருக்கும் புளியை தண்ணீரோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக, தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து மீண்டும் மொத்தமாக அரைக்க வேண்டும்.
ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து பெருங்காயம் போட்டு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் துவையிலை அந்த சுடு எண்ணெயில் போட்டு ஒரு நிமிடம் வரை நன்றாக பிரட்டி விட்டு எடுக்க வேண்டும். கடாயில் இருந்து இறக்கிவைத்து ஆற வைத்தால் ருசியான கருவேப்பிலை துவையல் ரெடி. சாதத்துடன் சிறிது துவையல் வைத்து சாப்பிட்டால் உடலுக்கு மிக மிக நல்லது. இந்த துவையலை தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வர இரும்பு சத்து அதிகரிக்கும். தலைமுடி உதிர்வு முற்றிலும் குறையும். நரைமுடியும் கருமை நிறமாக மாறும். ஒரு முறை டிரை பண்ணி பாருங்க.