Asianet News TamilAsianet News Tamil

கொய்யா இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா..??

தமிழ்ச் சமூகத்துடன் மிகுந்த தொடர்புடையது கொய்யாப் பழம். இன்னும் தமிழகத்தின் மேற்கு மாவட்டப் பகுதிகளில் கொய்யா மரங்கள் இல்லாத வீடுகளே இருக்காது. சிவப்பு கொய்யா மரம், வெள்ளை கொய்யா மரம், மஞ்சள் கொய்யா மரம் என்கிற வகை வகையான கொய்யா மரங்கள் அங்கு உள்ளன. இதுபோன்று தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் கொய்யா மரங்களை விரும்பி வளர்ப்போர் இருக்கின்றனர். ஆனால் வெறும் கொய்யாப் பழத்துக்காக மட்டுமே கொய்யா மரங்களை பலரும் வளர்க்கின்றனர். ஆனால் கொய்யா பழத்துக்கு இணையான, மருத்துவக் குணங்களை கொண்டது கொய்யா மர இலைகள். அதில் புரதம், வைட்டமின்கள் பி 6, கோலைன், வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகளும், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் போன்றவை இருக்கிறது.  துவர்ப்பு சுவை கொண்ட இந்த இலைகளை, கால்நடைகளும் விரும்பி உண்ணும்.
 

many health benefits are there for guava leaves from experts point of view
Author
First Published Sep 8, 2022, 10:25 PM IST

கொழுப்பு குறையும்

முன்னதாகவே குறிப்பிட்டது போல கொய்யா இலையில் ஆண்டி ஆக்ஸிடெண்ட், ஆண்டி பாக்டீரியா எதிர்ப்பு திறன், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளன. இதை தினமும் சாப்பிட்டு வரும்போது உடலில் தேங்கி இருக்கும் அடர்த்தியான கெட்டக் கொழுப்புகளை நீக்குகிறது. மேலும் கொழுப்பு அமிலங்களையும் குறைக்க உதவுகிறது.

இருதய நோய்களை விரட்டு 

கொய்யா இலைகளை கொண்டு தயாரிக்கப்படும் கஷாயம் தொண்டை புண் மற்றும் சளி தேக்கத்துக்கு நல்ல தீர்வாக அமையும். மேலும் இருமல், மூக்கடைப்பு போன்ற பிரச்னைகளையும் வர விடாமல் தடுக்கும். கொலை இலையை காயவைத்து, அதை பொடிப் பண்ணிவிட வேண்டும். தினமும் தேனில் அதை கலந்து சாப்பிட்டு வந்தால் இருதயம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படாது. அதுதவிர, உடல் எடை விரைவாக குறைக்கவும் இது உதவும்.

many health benefits are there for guava leaves from experts point of view

மூச்சுக் குழாய் ஒவ்வாமைக்கு மருந்து

நன்றாக கொதிக்கும் நீரில் சிறிதளவு துளசி, இஞ்சியுடன் கொய்யா இலைகளையும் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொய்யா இலை வெந்த பிறகு, தண்ணீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதை தினந்தோறும் குடித்து வந்தால் மூச்சுக்குழாயில் ஏற்படும் ஒவ்வாமை நீங்கும். இதே முறை செரிமானக் கோளாறையும் தடுக்கும்.

அவசர காலை உணவுக்கு ஏற்றது ''தயிர் சாண்ட்விச்''! - ஸ்பீடா செஞ்சு சாப்பிட்டு போயிட்டே இருக்கலாம்!!
 

செரிமானக் கோளாறு நீங்கும்

ஐந்து கொய்யா இலைகளை, கொஞ்சம் சீரகத்துடன் சேர்த்து கொதிக்கும் நீரில் போட்டு வைக்க வேண்டும். அதை பருகி வந்தால், உடனடியாக வயிற்று சார்ந்த பிரச்னைகள் நீங்கும். செரிமானக் கோளாறு இருந்தாலும் உணவு சீக்கரம் சீரணமடையும். உணவுகளால் ஏற்படும் ஒவ்வாமை பாதிப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும்.

many health benefits are there for guava leaves from experts point of view

இன்சுலின் சுரப்பியை தூண்டும்

கொய்யா இலைகளின் சாற்றை அருந்தும்போது நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளின் இன்சுலின் சுரப்பியினைத் தூண்டி சுக்ரோஸ் மற்றும் மால்டோஸ் உள்ளீர்ப்பை தடுக்கிறது, மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios