பெண்களுக்கும் சிலருக்கு தற்காலிகமாக வழுக்கை வருவதுண்டு அல்லது அதிக அளவில் முடி உதிர்வதை காண முடியும். 

உடலில் அதிக உஷ்ணம் மன அமைதியின்மை போன்றவற்றாலும் வழுக்கை ஏற்படும். ஒரு  சிலருக்கு பரம்பரை பரம்பரையாக வழுக்கை ஏற்படுவது உண்டு. இதனை சரி செய்ய என்னென்ன வழி முறைகள் உள்ளது என்பதை பார்க்கலாம்.

இலந்தை இலையை அரைத்து அதன் சாற்றை வழுக்கையுள்ள இடத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி வடிக்கட்டி வைத்துக்கொண்டு உபயோகித்து வந்தால் வழுக்கை விழுவதை எளிதில் கட்டுப்படுத்தலாம்.

இதே போன்று சோற்று கற்றாழையை தலையில் தேய்த்து வந்தாலும் வழுக்கை குறையும். சிறிய வெங்காயத்தை தலையில் அழுத்தி தேய்த்து வர, வழுக்கை வருவதை தடுக்கலாம். 

அதிமதுரத்தை எருமைப்பாலில் அரைத்து வாரத்திற்கு மூன்று முறை தடவி வர  நல்ல பலன் கிடைக்கும். பூண்டை உலர்த்தி, பொடி செய்து அதை தேனில் கலந்து வழுக்கையின் மீது பூசி  வந்தால் முடி வளரும்.