how to be success in our life

வாழ்கையில் முன்னேற பல வழிகள் இருந்தாலும் ஒரு சில வழிகள் தான் மிகவும் சிறந்தவனவாகவும்,மிக எளிதில் பின்பற்றக்கூடியதாகவும் இருக்கும் அந்த வகையில் மிக மிக சிறந்த வழி எது தெரியுமா ?

நிறைய பேர் பார்த்தீங்கனா...நிறைய பேசுவாங்க..நான் அதை செய்து விடுவேன் ... இதை செய்து விடுவேன் என்று..ஆனால் கடைசியில் ஒன்றும் செய்திருக்க மாட்டார்கள்.
மற்ற சிலர் வேறு ரகம் அதாவது , எதையும் சொல்லவே மாட்டார்கள் ... ஆனால் காரியவாதியாக இருப்பார்கள்...அதாவது செய்வன திருந்த செய் என்பார்கள் .. அதற்கேற்றவாறு அவர்கள் செய்வதை செவ்வனே செய்வார்கள்.

நக்கலடிதே நாசமாய் போனவர்கள் 

இதில் என்ன புரிகிறது ? பெரும்பாலான மக்கள் ஜாலியாக பேசுவதாக நினைத்து, நக்கல் செய்து கொண்டே இருப்பார்கள்.அதாவது மற்றவர்கள் ஒரு படி முன்னேறினாலும், அவர்களுக்கு ஒரு பாராட்டை கூட தெரிவிக்காமல் இருந்தாலும் சரி,ஆனால் அவர்களை நக்கல் செய்தே நாசமாய் போவார்கள் .. அதாவது தானும் முன்னேறாமல், பிறர் வாழ்வில் முன்னேறுவதை பார்த்து சகித்துக்கொள்ளவும் முடியாமல் தவிப்பர்.அதனால் வரக்கூடியது தான் இந்த விளைவு ...

இதற்கெல்லாம் ஒரு தீர்வாக ..நாம் எதை எப்போது பேச வேண்டுமோ .. அதை மட்டும் பேசிவிட்டு அமைதியாக இருந்தாலே போதும்.நடப்பது எல்லாம் நன்மைக்கே....
தவளை தன் வாயால் கெடும் என்பதற்கு ஏற்ப,நம் வாயால் நம் முன்னேற்றமே தடை படும் தருவாயில், வாய் பேசாமல் அமைதியாக இருப்பதே நல்லது.வாழ்வில் முன்னேற்றம் அடையலாம்