Horoscope: சனி பகவானின் முக்கிய அதிசார பெயர்ச்சி மற்றும் வக்ர பெயர்ச்சியும் ஏப்ரல் மாதம் இறுதிக்கு தொடங்கி ஜூலை மாதம் வரை நிகழ இருக்கிறது.
சனி பகவானின் முக்கிய அதிசார பெயர்ச்சியும் அதைத் தொடர்ந்து வக்ர பெயர்ச்சியும் ஏப்ரல் மாதம் இறுதிக்கு தொடங்கி ஜூலை மாதம் வரை நிகழ உள்ளது. அதன்படி, 29 ஏப்ரல் 2022 அன்று சனி பகவான் மகரத்திலிருந்து, கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். பின்னர் 5 ஜூன் 2022 அன்று வரை சனி பகவான் வக்ர பெயர்ச்சியாக கும்பத்தில் இருப்பார்.
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு பழைய கசப்பான விஷயங்களை பற்றி யோசிக்காதீர்கள். செலவுகள் குறைந்து வரவுகள் அதிகரிக்கக் கூடிய நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்க முடியும் என்கிற துணிவு பிறக்கும்.எதிலும் நிதானம் அவசியம்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வரவு உண்டாகும். மனதிற்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மன நிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பாராட்டுபடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை. அவசரத்தில் நீங்கள் செய்யும் சில காரியங்கள் மூலம் மற்றவர்கள் பாதிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும். பண வரவு திருப்தியை தரும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள்உற்சாகமாக இருக்கும். கணவன் மனைவியிடையே அலட்சியம் வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மன சோர்வு ஏற்படும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் நிலவிய பயம் விலகும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன்- மனைவி அன்னோன்யம் அதிகரிக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்கள் உங்கள் குறிக்கோளை எட்டி பிடிக்க முயற்சிப்பீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமைக்கு குறைவிருக்காது. பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்கள் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விருத்தி அடையும் வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். ஆன்மிக வாதிகளின் சந்திப்பு நிகழும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு யாருக்கு, பணம் நகை வாங்கி தருவதில் ஈடுபட வேண்டாம். நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மாறும். சுய முடிவுகளை எடுப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அதிகம் பொறுமை அவசியம்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பிடிவாதமாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த முன்னேற்றம் படிப்படியாக உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடமையில் கூடுதல் கவனம் தேவை. சில நேரம் கோபம், எரிச்சல் அடையாளம்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்கள் வருங்காலத்திற்கு ஏற்ற முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்கள் தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்குமுன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது நல்லது. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு மனக்குழப்பம் நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் பெரிய மனிதர்களுடைய ஆலோசனையை கிடைக்கும். . உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிறப்பாக செயல்படும் நேரம் இது. ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் குறையும்.
