ராகு, கேது பெயர்ச்சியால்...12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப் போகிறது..? யாருக்கெல்லாம் ராஜா யோகம்..!
Horoscope: ராகு கேதுவின் மாற்றம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு, அட்டகாசமான பலன்களை அள்ளி கொடுக்கிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளலாம்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சியாகும் இந்த ராகு, கேது பெயர்ச்சி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கொடுக்கும்.ஏப்ரல் 12ம் தேதி ராகு ராசி மாறி மேஷ ராசிக்கு பிரவேசித்தார். கேது துலா ராசியில் பிரவேசித்துள்ளார். ராகு-கேதுவின் இந்த ராசி மாற்றம் யாருக்கு அட்டகாசமான பலன்களை தருகிறது என்பதைதெரிந்து கொள்ளலாம்.
மேஷம்:
மேஷ ராசியினருக்கு இந்த நாள் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, அதிர்ஷ்டம் ஏற்படும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். உங்களுடைய மன குழப்பங்கள் தீர்ந்து தெளிவான முடிவு எடுக்கக் கூடிய தைரியம் பிறக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, மனக்கசப்புகள் தீரும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண ரீதியான விஷயத்தில் எச்சரிக்கை தேவை. இந்த நாள் உங்கள் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். பதவி உயர்வு கிடைக்கும். பண வரவு வரும். நீண்ட நாள் எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியாக இருப்பது நல்லது. எதிர்பாராத திடீர் செலவுகள் வந்து சேரலாம். வாகன ரீதியான பயணங்களின் போது கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகமாக இருக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய பணியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்து ஒன்று கிடைக்கும். முழு முயற்சியுடன் செயல்படும் பொழுது உங்களுடைய தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சுய தொழிலில் நீங்கள் அதிக லாபம் காணலாம். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமண யோகம் கிடைக்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமோகமான நாளாக இருக்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி வாகை சூடுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வேண்டிய பலன் கிடைக்கும். வல்லமை திறக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். கணவன்- மனைவி அன்னோன்யம் அதிகரிக்கும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இந்த நாள் உற்சாகமாக இருக்கும். குடும்ப விஷயங்களை மற்றவரிடம் தெரிவிக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இரட்டிப்பு லாபம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காணப்படும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் படிப்படியாக குறையும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஓங்கும். எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும்.