Horoscope: ஜோதிடத்தில் சூரிய பகவான் அனைத்து கிரகங்களுக்கும் ராஜா என்று அழைக்கப்படுகிறார். சூரியன் சுப பலன்களைத் தரும்போது அதிர்ஷ்டம் மழையாகப் பொழியும். ஏப்ரல் 14ஆம் தேதி மீன ராசியில் இருந்து, சூரியன் மேஷ ராசிக்கு சென்றுள்ளார். யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் என்பதை இந்த பதிவில் தெரிந்த்து கொள்ளுங்கள்.

ஜோதிடத்தில் சூரிய பகவான் அனைத்து கிரகங்களுக்கும் ராஜா என்று அழைக்கப்படுகிறார். சூரியன் சுப பலன்களைத் தரும்போது அதிர்ஷ்டம் மழையாகப் பொழியும். ஏப்ரல் 14ஆம் தேதி மீன ராசியில் இருந்து, சூரியன் மேஷ ராசிக்கு சென்றுள்ளார். யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் என்பதை இந்த பதிவில் தெரிந்த்து கொள்ளுங்கள்.

மேஷம்: 

மேஷ ராசிகர்களுக்கு இந்த நாள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்கள் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனம் தேவை. 

ரிஷபம்: 

ரிஷப ராசிகர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருட் சேர்க்கை அதிகரிக்கும். பொருளாதாரம் மேம்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளுடன்ஒற்றுமை கிடைக்கும். 

மிதுனம்: 

மிதுன ராசியினருக்கு, இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். உங்களை விட்டு நீங்கியவர்கள் மனம் திருந்தி வர வாய்ப்பு உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை கொள்ளுங்கள். 

கடகம்: 

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்களின் எண்ணிக்கை வலுவாகும். சக மனிதனை மதிப்பு போற்றுவது சமுதாய அக்கறையை காட்டும். 

சிம்மம்: 

சிம்ம ராசியினருக்கு இந்த நாள் உங்களுடைய பிரார்த்தனைகளுக்கு விரைவில் பலன் கிடைக்க இருக்கிறது. முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டிருந்த நஷ்டங்கள் குறையும். ஆரோக்கியத்தில் அக்கறை கிடைக்கும். 

கன்னி: 

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய கருத்துகளை தைரியமாக முன் வைப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.

துலாம்: 

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை காணப்படும். ஆரோக்கியம் எச்சரிக்கை தேவை. 

விருச்சிகம்: 

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோகமாக லாபம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் நுண்ணிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு அமையும். 

தனுசு: 

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. உங்களுடைய முழு ஒத்துழைப்பு கொடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்: 

மகர ராசியினருக்கு இந்த நாள் உங்களுக்கு சுறுசுறுப்பான சூழ்நிலை உள்ளது. எதிலும் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் அகலும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். 

கும்பம்: 

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இருப்பவர்களுக்கு அதிகம் பொறுமை தேவை. தேவையற்ற முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் ஒத்துழைப்பு கொடுப்பது நல்லது. 

மீனம்: 

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியாக இருக்கும். மனதில் இருந்து வந்த கவலைகள் அகலும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருமான உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் துவங்குபவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியம்மேம்படும்.