Horoscope: குரு பகவான் வரும் தற்போது ஏப்ரல் 13 ஆம் தேதி, கும்ப ராசியில் ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் மாறுகிறார். இன்றைய 12 ராசிகளின் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 

குரு பகவான் வரும் தற்போது ஏப்ரல் 13 ஆம் தேதி, கும்ப ராசியில் ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் மாறுகிறார். இன்றைய 12 ராசிகளின் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 

மேஷம்: 

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு வெளி வட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் அக்கறை கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண நெருக்கடி ஏற்படலாம். பணியிடத்தில் அலைச்சல் ஏற்படும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

ரிஷபம்: 

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெற்றியாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உங்களுடைய நேர்மறையான சிந்தனை மற்றவர்களையும் தொற்றிக் கொள்ளும். செயல்களில் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். 

மிதுனம்: 

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் பேச்சில் அனுபவம் அறிவு வெளிப்படும். எதிர் பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். உங்களுடைய புதிய தொழில் முயற்சிக்கு நல்ல வரவேற்பு காத்திருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும்.

கடகம்: 

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். திருமண யோகம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும்.

சிம்மம்: 

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு அரசு, வங்கி வகையில் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் மூத்தவர்களை அனுசரித்து செல்வீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் காணப்படும். எந்த செயலிலும் வெற்றி கிடைக்கும். 

கன்னி: 

எதையும் தாங்கும் மன வலிமை கிடைக்கும். இந்த நாளில், சுயசிந்தனை அதிகரித்து காணப்படும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு சரியான தருணங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் விஷயங்களில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. 

துலாம்: 

துலாத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளை ஏற்படலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். 

விருச்சிகம்: 

சவாலான காரியங்களை தைரியமாக செய்து முடிப்பீர்கள். திடீர் பயணம் உண்டாகும். நீங்கள் நினைத்தது வெற்றிகரமாக நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும்.

தனுசு: 

அதிகார பதவியில் இருப்பவர்களுக்கு புதிய நட்பு கிடைக்கும். பழைய சொந்தங்கள் தேடி வந்த பேசுவார்கள். தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் மனம்விட்டுப் பேசுவது நல்லது.

மகரம்: 

மகரத்தில் பிறந்தவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவார்கள். தேவையற்ற வெளியிட பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அதிக பொறுமை தேவை. எதையும் பொறுமையுடன் செயல்படுத்துங்கள். 

கும்பம்: 

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு கடன் வாங்கிய பணத்தை திருப்பி தருவீர்கள். பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய உத்திகள் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். வேலையில் அதிக கவனம் தேவை.

மீனம்: 

மீனத்தில் பிறந்தவர்கள் சகோதர உறவு ஆதரவாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

 மேலும் படிக்க ...Horoscope: ஏப்ரல் 12 ம் தேதி ராகு, கேது பெயர்ச்சி... இந்த வாரம் முழுவதும் ராஜ யோகம் பெறப்போகும் 5 ராசிகள்....