Horoscope: மிதுனம், கும்பத்திற்கு வாழ்வில் வெற்றி, தொட்டது துலங்கும்...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்.!

Horoscope: ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் ராசியை வைத்து, ஒரு நபரின் ஆளுமை, இயல்பு, நிகழ்காலம், எதிர்காலம் மற்றும் அதிர்ஷ்டத்தையும் கணிக்க உதவுகின்றன. 

Horoscope today astrology predictions

ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் ராசியை வைத்து, ஒரு நபரின் ஆளுமை, இயல்பு, நிகழ்காலம், எதிர்காலம் மற்றும் அதிர்ஷ்டத்தையும் கணிக்க உதவுகின்றன. சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய நீங்கள் தேர்வு செய்யக்கூடிய விஷயங்கள், ராசி பலன்களை வைத்து கணிக்கப்படுகிறது. ஜோதிடத்தின் படி, இன்றைய 12 ராசிகளின் பலன் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மேஷம்:

கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு வந்து நீங்கும்.யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். வாகனம் செலவு வைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இடைவிடாத உழைப்பு உடல் சோர்வை ஏற்படுத்தும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

ரிஷபம்: 

மனதில் பட்டதை நேர்மையாக பேசுவது நல்லது. புதிய தன்னம்பிக்கை துளிர் விட கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்தாலும் அதற்குரிய செலவுகளும் இருக்கும்.  பாதியில் நின்ற சில காரியங்கள் முடிவு பெரும்.

மிதுனம்:

தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். ஆன்மிக பயணம் செல்ல கூடும். பெரியோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உங்களுக்கு மனநிம்மதியைக் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு பெருகும். 

கடகம்:

திட்டமிட்ட காரியங்கள் கை கூடும். கணவன் மனைவி இடையே புரிதல் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எடுத்த முடிவுகளில் இருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும்.

சிம்மம்:

பிள்ளைகளின் வருங்காலம் குறித்து ஆலோசனை பண்ணுவீர்கள். யோக, தியானம் என மனம் செல்லும். வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கூட்டு தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

கன்னி:
 
தாய் வழியில் மதிப்பு உயரும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். வாழ்வில் உயரத்திற்கு செல்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் பெருகும். பொருளாதார ரீதியான ஏற்றம் சிறப்பாக இருப்பதால் வீட்டுத் தேவைகளை திறம்பட சமாளித்து விடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம்: 

பிரச்சனைகளின் மூலம் கண்டறிந்து தீர்ப்பது அவசியம். பிள்ளைகளால் புகழ், பெருமை உண்டாகும். வீடு பராமரிப்பு மேற்கொள்வீர்கள். மற்றவர்களிடம் நீங்கள் பழகும் விதம் உங்களின் மீது மதிப்பை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாய்ப்புகள் அதிகரிக்கும்.  

விருச்சிகம்:

கடனை தீர்க்கும் முயற்ச்சியில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக பயணத்திற்கு திட்டமிடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவைப்படக்கூடிய நேரத்தில் பணம் கிடைக்கும். உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். போட்டு தேர்வுகளில், வெற்றி நிச்சயம்.

தனுசு:

எதிர்ப்புகளை தாண்டி வாழ்வில் வெற்றி அடைவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண வரவு உண்டாகும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்பதால் வீட்டில் இருப்பவர்கள் உடைய ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.

மகரம்:

எங்கு சென்றாலும் வரேவேற்பு கிடைக்கும். தயார் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு போட்டி, பொறாமை வலுவாக வாய்ப்புகள் உண்டு என்பதால் முன்னெச்சரிக்கை தேவை. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

கும்பம்:

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்ல முயற்சி செய்வீர்கள். சகோதர சகோதரிகள் வழயே அனுகூலமான பலன்கள் உண்டு.

மீனம்:

முன்கோபத்தை கட்டுப்படுத்துவது சிறந்தது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் தரப்பு நியாயங்களை உறுதியாக எடுத்து முன் வைப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். 

மேலும் படிக்க ....Horoscope : குரு பகவானின் ராசி மாற்றம்...இந்த 5 ராசிகர்களுக்கு பண மழை பொழியும்..! இன்றைய ராசி பலன்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios