Black spots: முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி பொலிவு பெற...வீட்டில் தயாரிக்கும் இந்த ஒரு பேஸ் பேக்..

Black spots: ஒருமுறை இந்த கரும்புள்ளிகள் முகத்தில் தோன்றி விட்டால் நம் முக அழகை முற்றிலும் பாதிக்கும். சரி வாங்க ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை எவ்வாறு அகற்றலாம் என்பதை பார்க்கலாம்.

home remedies for face black spots

இன்றைய நவீன வாழ்கை முறையில், கணினியின் பயன்பாடு அதிகரிக்க துவங்கியுள்ளது. அவ்வாறு ஒரு நாள் முழுவதும் கணினி முன் அமர்ந்து வேலை பார்க்கும் பொழுது அவர்கள் கண்ணுக்கு கீழே கருவளையம் உண்டாகிறது. 

அது மட்டுமல்லாமல், சூரிய ஒளி அதிகம் படுவதாலும்,  நம் உடலில் ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டாலும், சிகிச்சையின்போது பல மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலமாகவும், சரியான தூக்கம் இல்லாமலும், மன அழுத்தம் கொண்டிருந்தாலும் கண்டிப்பாக முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவது வழக்கமான ஒன்று.

home remedies for face black spots

அதேபோல் முகப்பருக்களால் உண்டாகும் கருப்பு தழும்புகளும் முகத்தில் ஆங்காங்கே அப்படியே நின்று விடுகிறது. இவற்றால் உங்கள் முகத்தின் அழகு பாதிக்கப்படுகிறது. ஒருமுறை இந்த கரும்புள்ளிகள் முகத்தில் தோன்றி விட்டால் நம் முக அழகை முற்றிலும் பாதிக்கும். சரி வாங்க ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை எவ்வாறு அகற்றலாம் என்பதை பார்க்கலாம்.
 
கரும்புள்ளிகள் மறைய டிப்ஸ்: 

இன்றைய பிஸியான வாழ்கை முறையில், வாழைப்பழம் ஒவ்வொரு வீட்டிலும் காலை உணவாக பயன்படுகிறது. அப்படியாக, அனைவரது வீட்டிலும் வாழைப்பழம் சுலபமாக கிடைத்து விடும்.

தேவையான பொருட்கள்:

வாழைப்பழத்தின் தோல் - 4

பச்சை அரிசி -  3 ஸ்பூன்

1. முதலில், வாழைப்பழத்தின் தோலை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் இதனை ஒரு பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.

2. பிறகு அதனுடன் சாதம் வடிக்கும் அரிசி அல்லது பச்சை அரிசியை மூன்று ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

3. பின்னர் கடாயினை சூடாக்கி அதன் மீது இந்த பாத்திரத்தை வைக்க வேண்டும்.இவை 15 நிமிடம் நன்றாக கொதித்த பிறகு அரிசியும் வாழைப் பழத்தோடு நன்றாக வெந்துவிடும். 

4. அரிசி சாதம் போன்று முழுவதுமாக வேகக்கூடாது. அரிசி பாதி அளவு தான் வெந்திருக்க வேண்டும். பின்னர் மீதம் இருக்கும் தண்ணீரை வடித்துவிட்டு வாழைப் பழத் தொலையும், அரிசியையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும்.

home remedies for face black spots

5. பிறகு இவற்றை ஆற வைத்து, பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த கிரீமில் இருந்து ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் க்ரீம் எடுத்து முகத்தில் தடவி, 10 லிருந்து 15 நிமிடம் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.பின்னர் இதனை குளிர்ச்சியான தண்ணீர் வைத்து கழுவி விடவேண்டும். மீதியான பேஸ்ட்டை ஒரு கண்ணாடி டப்பாவில் போட்டு காற்று புகாதவாறு மூடிக்கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க....Kitchen things: உங்கள் வீட்டு சமையலறையில் இந்த மூன்று பொருட்கள் இருந்தால்...வறுமையை ஓட ஓட விரட்டலாம்..!

இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால்,முகத்தில் இருக்கும் கருப்பு தழும்புகள் அனைத்தும் மறைந்து முகம் வெள்ளையாக மாறிவிடும். நீங்கள் ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள். ஒரு வாரத்தில் உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios