Kitchen things: உங்கள் வீட்டு சமையலறையில் இந்த மூன்று பொருட்கள் இருந்தால்...வறுமையை ஓட ஓட விரட்டலாம்..!
Kitchen things: ஒவ்வொரு வீட்டிலும், பூஜை அறை கோவில் போன்றது. அதற்கு அடுத்தபடியாக நாம் அதிகம் பயன்படுத்தும் சமையல் அறை.அவற்றில், தவறாமல் இடம் பெற வேண்டிய பொருட்கள்.
ஒவ்வொரு வீட்டிலும், பூஜை அறை கோவில் போன்றது. அதற்கு அடுத்தபடியாக நாம் அதிகம் பயன்படுத்தும் சமையல் அறை.
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது பழமொழி. . எனவே பூஜையறையை எப்போதும் சுத்தமாகவும், சுபிட்சமாகவும் வைத்திருக்க வேண்டும். அதேபோன்று, தூய்மையான இடத்தில் சமைக்கப்படும் உணவு நமக்கு ஆரோக்கியமான உடல்நலத்தை அளிக்கும். தூய்மையான சமையலறையில் சமையல் செய்வது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைக்க உதவும். குறிப்பாக, இந்த இரண்டு இடங்கள் தான் மகா லட்சுமி தேவி வந்தமரும் இடங்களாகும்.
அப்படியாக, மகா லட்சுமி தேவி வாசம் தரும் சமையலறையில் ஒரு சில விஷயங்களை கடைப்பிடிக்கும் பொழுது ஐஸ்வர்யம் உண்டாகிறது.
அந்த வகையில், சமையலறையில் இந்த மூன்று பொருட்களை எப்பொழுதும் குறைவில்லாமல் வைத்திருந்தால், வறுமை என்பதே இருக்காது, மகாலட்சுமி வாசம் செய்வதால்,பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். அவை என்னென்ன பொருட்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
1. முதலில் உப்பு, பருப்பு, அரிசி மற்றும் அஞ்சரை பெட்டி பொருட்கள் இவை அனைத்தும் எப்பொழுதும் ஒருவரது வீட்டில் குறைவில்லாமல் இருக்க வேண்டும். குறிப்பாக, அந்த பொருட்களை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முழுவதுமாக தீர்ந்து போக விடக் கூடாது.
2. நெய் மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களில் ஒன்றாகும். எனவே, அனைவரது வீட்டிலும் பசும் நெய் இருக்க வேண்டும். நெய் வைத்து தினமும் தீபம் ஏற்றினால், வீட்டில் துன்பம் என்பதே இருக்காது.
3. குபேரருக்கு பிடித்த நெல்லிக்காய் ஊறுகாய். நெல்லிக்காயில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்கிறாள் என்பது தீகம். இவற்றில் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்தது.
இந்து மதத்தின் படி, குபேரர் தனது சொத்துக்களை இழந்து, அவற்றைத் திரும்பப் பெற, நெல்லி மரத்திடம் வரம் வேண்டி, மகாலட்சுமி தாயார் அருளைப் பெற்ற பிறகு தான் தனது செல்வங்களை திரும்பப் பெற முடிந்தது என்கின்றது.
4. பிரியாணி இலைக்கு எதிர்மறை சக்தி அதிகமாக இருக்கிறத. எனவே, இவற்றை உணவில் தினமும் சேர்த்து கொள்வது சிறந்தது. மேலும், பிரியாணி இலையை கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரின் வாசம் வீடு முழுவதும் பரவச் செய்யலாம்.இவ்வாறு செய்வது மன அழுத்தம் குறையும்.
5. நாம் உண்ணும் உணவில் சிறு துளி நெய்யாவது தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அல்லது நெய் வைத்து தினமும் ஒரு தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் துன்பம் என்பதே இருக்காது.