History of  Maha Shivaratri: மகா சிவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது அதன் பின்னணி என்ன என்பதை, கீழே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மகா சிவராத்திரி என்பது இந்து மதத்தில் கொண்டாடப்படும் சிறப்பான, விசேஷமாகும். இந்த விழாவானது, இன்று மார்ச் 1 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவ பூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மகா சிவராத்திரி சிறப்புகள் குறித்து திருவிளையாடற்புராணம், கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப்போகும் என்பது ஐதீகம். அத்தகைய சிறப்பு வாய்ந்த மகா சிவராத்திரி தோன்றிய வரலாறு குறித்து நாம் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க...Maha Shivaratri Pooja: மகாசிவராத்திரி நாளில்...பூஜை செய்து சிவனின் அளவற்ற அருளை பெறுவது எப்படி?

மகா சிவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்க...

பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். அந்த சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல், மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, சிவனைப்பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து, முடிவில் மோட்சத்தையும் அருள வேண்டும்’ என்றும் உமாதேவி வேண்டிக்கொண்டாள். சிவபெருமானும் ‘அப்படியே ஆகட்டும்’ என்று கூறி அருள் புரிந்தார்.

புராணங்களின்படி:

சமுத்திர மந்தன் என்று அழைக்கப்படும் பாற்கடலை வாசுகி என்ற பாம்பை கொண்டு தேவர்கள் கடைந்த போது விஷம் கடலில் கலந்தது. இது முழு உலகையும் அழிக்கக்கூடும் என்று தேவர்கள் நம்பியதால் பயந்துபோனார்கள். இதனையடுத்து அவர்கள் சிவபெருமானிடம் உதவிக்காக ஓடியபோது, ​​அவர் கொடிய விஷத்தை குடித்தார். ஆனால் அதை விழுங்குவதற்கு பதிலாக தொண்டையில் வைத்திருந்தார். இதனால் சிவ பெருமானின் தொண்டை நீலமாக மாறியது, இதன் காரணமாக, அவர் நீல நிற தொண்டையான ‘நீல்காந்தா’ என்று அறியப்பட்டார். இந்த சம்பவம் நடைபெற்ற தினமே சிவராத்திரி என கொண்டாடப்படுவதாக அறியப்படுகிறது.

மேலும் படிக்க...Maha Shivaratri Fasting: மகாசிவராத்திரி விரதமுறைகள் தெரியுமா...? விரதமிருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை.?

சிவன் பார்வதியை மணந்த நாள் சிவராத்திரி:

 சிவன் மற்றும் சக்தியின் திருமணத்தின் புராணக்கதை மகாசிவராத்திரி பண்டிகை தொடர்பான மிக முக்கியமான புராணக்கதைகளில் ஒன்றாகும். சிவன் தனது தெய்வீக மனைவியான சக்தியுடன் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டதை கதை விவரிக்கிறது. சிவன் மற்றும் சக்தியின் புராணங்களின்படி, சிவன் பார்வதியை மணந்த நாள் சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது.

சிவலிங்கம்:

சிவலிங்கத்தின் புராணக்கதை மகா சிவராத்திரியுடன் ஆழமாக தொடர்புடையது. மஹா சிவராத்திரி நாளில் தான் சிவன் முதலில் ஒரு லிங்க வடிவில் தன்னை வெளிப்படுத்தினார் என்று நம்பப்படுகிறது. அப்போதிருந்து, இந்த நாள் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது மற்றும் சிவனின் மகத்தான இரவு மகா சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. இந்நாளை கொண்டாட, சிவபெருமானின் பக்தர்கள் பகலில் விரதம் இருந்து இரவு முழுவதும் இறைவனை வணங்குகிறார்கள். அப்படியாக, இந்த நாளில் சிவபெருமானை வணங்குவது நம்முடைய வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் தருகிறது என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க .....Maha Shivaratri mantra: சிவசிவ என்றிட தீவினை தீருமாம்...மகா சிவராத்திரியில் உச்சரிக்க வேண்டிய சிவ மந்திரங்கள்!

மேலும் படிக்க...Maha Shivaratri pray: களைகட்டிய மகா சிவராத்திரி வழிபாடு...சிவாலயங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்..!