Maha Shivaratri pray: களைகட்டிய மகா சிவராத்திரி வழிபாடு...சிவாலயங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்..!
Maha Shivaratri pray: மகா சிவராத்திரியை முன்னிட்டு, திருவாடானை, தொண்டி சிவாலயங்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ பெருமானை தரிசித்து வருகின்றனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு, திருவாடானை, தொண்டி சிவாலயங்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ பெருமானை தரிசித்து வருகின்றனர்.
இந்த வருடம் மகாசிவராத்திரி மார்ச் 1 ஆம் தேதி அதாவது இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.இந்து மதத்தில் சிவபெருமானின் வீடு கைலாச மலை என்று கூறப்படுகிறது. பரவலான நம்பிக்கையின்படி, சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் சிவராத்திரி நன்னாளன்று தான் திருமணம் நடைபெற்றது.
இந்நாளில், சிவ பக்தர்கள் அதிகாலையில் குளித்து முடித்து, விரதத்தை தொடங்கி நாள் முழுவதும் சிறிதும் உறங்காமல் அருகிலுள்ள சிவன் கோயில்களுக்குச் சென்று சிவனை கண்டு தரிசித்து, மறுநாள் அதிகாலையில் சிவாலயங்களில் அபிஷேக ஆராதனைகள் முடிந்த பின் தன்னுடைய விரதத்தை முடித்துக் கொள்வதை வழக்கமாக கொள்வார்கள்.
இந்த நாளில்,சிவபெருமானை முழு பக்தியுடனும் சடங்குகளுடனும் வழிபட்டால், சிவ பெருமான மகிழ்ச்சி, செல்வம், ஆரோக்கியம் என அனைத்தையும் தருவார் என்பது மக்களின் நம்பிக்கை ஆகும்.
அதன்படி,மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனாய வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், நம்புதாளை நம்பு ஈஸ்வரர் ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. அங்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டு வருகின்றனர்.
நேற்று மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற வகையான ஆராதனை நடைபெற்றது. நடந்தன. ஏராளமான பக்தர்கள் தேவாரம், திருவாசகம் போன்ற பக்திபாடல்களை பாடி சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.