மசூதியில் கோலாகலமாக நடந்த "இந்து  திருமணம்"..! மந்திரம் ஓதி தாலி கட்டிய  மாப்பிள்ளை..! இந்துக்களும் இஸ்லாம் மக்களும் ஒருசேர வாழ்த்து..!

கேரள மாநிலத்தில் மசூதி ஒன்றில் இந்துமத பாரம்பரிய சடங்குகளுடன் திருமணம் நடத்தப்பட்டது அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் சேர்ந்த செருவல்லி ஜமாத் என்ற மசூதி உள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்த இந்து பெண்ணான அஞ்சுவுக்கு  திருமணத்தை நடத்தி வைக்கும் படி மசூதி கமிட்டியிடம் கேட்டுள்ளார் அஞ்சுவின் தாயார். 

இதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட அவர்கள் அஞ்சுக்கும் சரத் என்ற மணமகனுக்கும் இந்துமத முறைப்படி மசூதிகள் திருமணம் செய்யப்பட்டது.

குறைந்தது தங்கம் விலை.. ? சவரன் விலை  எவ்வளவு தெரியுமா ..?

அப்போது மணப்பெண்ணுக்கு 2 லட்சம் மதிப்பில் பொருட்களையும், பத்து சவரன் தங்க நகையும் இஸ்லாம் மக்கள் வழங்கினர்.

இந்த திருமணத்தில் 2500க்கும் மேற்பட்ட இஸ்லாம் மற்றும் இந்து மக்கள் கலந்து கொண்டனர். இந்த திருமண புகைப்படத்தை பதிவிட்டு தனது ட்விட்டேர் பக்கத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். மேலும் தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது