Asianet News TamilAsianet News Tamil

வெஸ்டர்ன் டாய்லெட் யூஸ் பண்றீங்களா.? அப்ப மூடியை மூடி  ஃப்ளஷ் செய்யுங்கள்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

ஃப்ளஷ் செய்யும் போது நாம் ஏன் எப்பொழுதும் கழிப்பறை மூடியை கழுவ வேண்டும் என்பதை குறித்து விரைவாக இங்கு பார்க்கலாம்.

heres reasons behind why you should close the toilet lid before flushing in tamil mks
Author
First Published Jan 29, 2024, 1:03 PM IST

நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் கழிப்பறைக்கு செல்வது வழக்கம். அது வீடாக இருந்தாலும் சரி, அலுவலகமாக இருந்தாலும் சரி, நமக்கு அது எப்போதும் தேவை. பொதுவாகவே, நாம் வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பயன்படுத்திய பிறகு, ஒவ்வொரு முறையும் அதை ஃப்ளஷ் செய்துவிட்டு செல்வது வழக்கம். ஆனால், நீங்கள் அப்படி ஃப்ளஷ் செய்யும் போது சரியான முறையில் தான் சுத்தம் செய்கிறீர்களா என்று உங்களுக்குத் தெரியுமா..? மேலும், ஃப்ளஷ் செய்யும் போது கழிப்பறை மூடி திறந்து இருக்க வேண்டுமா..? அல்லது மூடியிருக்க வேண்டுமா..? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடை இங்கே..

ஃப்ளஷ் செய்யும் போது மூடியை மூடி வைக்கவும்: 
இதுகுறித்து மருந்துவ நிபுணர்கள் கூறுகையில், நாம் ஒவ்வொரு முறையும் ஃப்ளஷ் செய்யும் போது கழிப்பறையின் மூடியை மூடி வைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அப்படி செய்யவில்லையெனில், 
நம் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர். ஏனெனில் இதன் காரணமாக பல வகையான பாக்டீரியாக்களுடன் நாம் தொடர்பு கொள்ள வாய்ப்புகள் அதிகம்.

முக்கியமாக நீங்கள் உங்கள் பாத்ரூமை கழுவும்போது கூட கழிப்பறையின் மூடி மூடியிருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். அதுபோல் நீங்கள் வெஸ்டர்ன் டாய்லெட் கழுவும் போது அவற்றின் மூடியையும் கண்டிப்பாக கழுவ வேண்டும். மேலும் கழிப்பறையின் மூடியை திறந்து வைத்து ஃப்ளஷ் செய்யும் போது அதன் மூலம் பல ஆபத்தான பாக்டீரியாக்கள் காற்றுடன் கலந்து கொள்ளும்.

இதையும் படிங்க:  பொதுக் கழிப்பறைகளால் ஆபத்தான நோய்கள் ஏற்படலாம்.. இந்த விஷயங்களை மறக்காதீங்க..

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் ஃபிளஸ் செய்யும் போது அது உங்கள் கழிப்பறைக்குள் அனுப்புவது மட்டுமல்லாமல் அது துகள்களை காற்றில் வெளியிடுகிறது. இது பாக்டீரியாக்களால் நிறுத்தப்பட்ட ஒரு ஸ்பிரே ஆகும். மேலும் இந்த துகள்களில் கிருமிகள், வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் இருக்கலாம். நீங்கள் கழுவிய 8 வினாடிகளில் இது நிகழலாம். அத்தகைய சூழ்நிலையில், குளியலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் மற்றும் தொற்றுநோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, நீங்கள் எப்போதும் கழிப்பறை மூடியை மூடிவிட்டு அதை ஃப்ளஷ் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:  வெஸ்டர்ன் டாய்லெட் யூஸ் பண்றீங்களா.? அப்ப மூடியை மூடி  ஃப்ளஷ் செய்யுங்கள்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

இதுகுறித்து மேலும் கூறுகையில், நீங்கள் கழிப்பறைறை கழுவும் போதெல்லாம், குறிப்பாக நீங்கள் மற்றவர்களுடன் வீட்டில் இருக்கும்  கழிப்பறை இருக்கையை மூடுவதே சரியான அணுகுமுறை. இதை முன்கூட்டியே செய்தால் நல்லது. அதே நேரத்தில், பல பொது கழிப்பறைகளில் கழிப்பறை இருக்கைக்கு மேல் மூடி இருக்காது. அத்தகைய சூழ்நிலையில், அது உங்களுக்கு பலவிதமான சிக்கல்களை உருவாக்கலாம். எனவே, இதை தவிர்க்க, உடனடியாக ஃப்ளஷ் செய்து அங்கிருந்து ஓடிவிடுங்கள். அது தான் நல்லது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios