வயசுக்கு ஏற்ப உங்க எடை சரியாக உள்ளதா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
Weight Chart Age : நமது வயது ஏற்ப எடை என்னவாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டால் எண்ணற்ற நோய்களை தவிர்க்கலாம்.
அதிக எடையுடன் இருப்பது உடல் மட்டுமின்றி, மன அழுத்தத்தையும் அதிகரிக்க செய்கிறது. இன்னும் சொல்லப்போனால், எடை அதிகரிப்பால் பலருக்கும் சாதாரண வாழ்க்கை கூட மிகவும் கடினமாக இருக்கிறது. இதனுடன் நோய்களும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
குறிப்பாக, அதிக எடையுடன் இருப்பது சமூக மற்றும் அன்புக்குரியவர்களுக்கிடையே கூட நம்மை தாழ்வாக உணர வைக்கும். எந்த சிரமமுமின்றி நீங்கள் ஆரோக்கியமாக வாழ விரும்பினால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். மேலும், நம்முடைய உடல் எடையை நமது வாழ்க்கை முறை, உடல் அமைப்பு மற்றும் அன்றாட செயல்பாடுகள் தான் தீர்மானிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, நமது வயது ஏற்ப எடை என்னவாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டால் எண்ணற்ற நோய்களை தவிர்க்கலாம். உங்களது வயதிற்கு ஏற்ப உங்களது எடை சரியாக உள்ளதா என்பதை அறிய கீழே உள்ள பட்டியலை பார்க்கவும்.
இதையும் படிங்க: நீங்க எடையை குறைக்க விரும்புகிறீர்களா? அப்ப இந்த 3 பழங்களை அதிகம் சாப்பிடாதீங்க!!
எந்த வயதில் எவ்வளவு எடை இருக்க வேண்டும்?
- பிறந்த குழந்தை - 3.3 கிலோ (ஆண்,பெண்)
- 2 முதல் 5 மாத குழந்தை - 6 கிலோ 5.4 கிலோ (ஆ,ப)
- 6 முதல் 8 மாத குழந்தை - 7.2 கிலோ 6.5 கிலோ (ஆ,பெ)
- 9 மாதம் முதல் 1 வயது வரை - 10 கிலோ 9.5 கிலோ (ஆ,பெ)
- 2 முதல் 5 வயது வரை - 12.5 கிலோ 11.8 கிலோ (ஆ,பெ)
- 6முதல் 8 வயது வரை - 14 - 18.7 கிலோ 14-17 கிலோ (ஆ,பெ)
- 9 முதல் 11 வயது வரை - 28-31 கிலோ 28-31 கிலோ (ஆ,பெ)
- 12 முதல் 14 வயது வரை - 32 -38 கிலோ 32-36 கிலோ (ஆ,பெ)
- 15 முதல் 20 வயது வரை - 40-50 கிலோ 45 கிலோ (ஆ,பெ)
- 21 முதல் 30 வயது வரை - 60-70 கிலோ 50-60 கிலோ (ஆ,பெ)
- 31 முதல் 40 வயது வரை - 59-75 கிலோ 60-65 கிலோ (ஆ,பெ)
- 41 முதல் 50 வயது வரை - 60-70 கிலோ 59-63 கிலோ (ஆ,பெ)
- 51 முதல் 60 வயது வரை - 60-79 கிலோ 59-63 கிலோ (ஆ,பெ)
இதையும் படிங்க: Weight loss tips: உடம்பில் கொழுப்பு கரைய வேண்டுமா? இதோ இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க!!
சுறுசுறுப்பான வாழ்க்கை முறை, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு சாப்பிடுதல் ஆகியவற்ற பின்பற்றுவதன் மூலம் நீங்கள் உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதிக எடை அதிகரிப்பு மற்றும் எடை இழப்பு இவை இரண்டும் கவலைக்குரிய விஷயமாகும். அதிக எடை காரணமாக உயரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால், நீங்கள் கவனமாக இருங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D