Asianet News TamilAsianet News Tamil

நீங்க எடையை குறைக்க விரும்புகிறீர்களா? அப்ப இந்த 3 பழங்களை அதிகம் சாப்பிடாதீங்க!!

Weight Loss Tips : சில பழங்கள் உடல் எடையை அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? எனவே உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் சாப்பிட கூடாத பழங்கள் இங்கே.

this 3 fruits you must avoid if you are trying to lose weight in tamil mks
Author
First Published Aug 5, 2024, 3:56 PM IST | Last Updated Aug 5, 2024, 3:55 PM IST

உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கும், பல வகையான நாள்பட்ட நோய்கள் வராமல் தடுப்பதற்கும் உடல் எடையை குறைப்பது மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. உடல் எடை அதிகரிப்பானது இதய நோய், நீரிழிவு நோய், வளர்ச்சியை மாற்ற பிரச்சனைகள், புற்றுநோய் போன்ற தீவிரமான அல்லது ஆபத்தான நோய்கள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக கருதப்படுகிறது. உடலை நோயற்றதாக வைத்திருக்க எடை மற்றும் இரத்த அழுத்தம் இவை இரண்டின் அதிகரிப்பை தடுக்க தொடர்ச்சியான முயற்சிகள் மிகவும் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

இன்று பெரும்பாலானோர் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் எடையை குறைப்பது எப்படி? இந்த கேள்வி அனைவரது மனதிலும் வந்து கொண்டே இருக்கும். இதற்கு வாழ்க்கை மற்ற உணவு முறை இவை இரண்டையும் மேம்படுத்துவது மிகவும் அவசியம் என்கின்ற நிபுணர்கள். வழக்கமான உடற்பயிற்சி செய்வதுடன் உணவில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் எடையை குறைக்கலாம். அந்தவகையில், சில பழங்கள் உடல் எடையை அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? எனவே, அவற்றை அளவை குறைப்பது மிகவும் அவசியம்.

உடல் எடையை குறைக்க எந்த பழங்களை சாப்பிடக்கூடாது?
நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க பழங்கள் சாப்பிடுவது நல்லது. ஆனால், சில பழங்கள் எடை அதிகரிப்பை ஏற்படுத்தும் உடல் எடையை குறைக்க, நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். காரணம், இவை நீண்ட நேரம் வயிற்றை நிரம்பி இருக்க வைக்கும் மற்றும் அதிக உணவு சாப்பிடுவதை தவிர்க்கும். ஆனால், எடை இழப்புக்கு சில பழங்கள் பொருத்தமாக கருதப்படுவதில்லை. அவை என்னென்ன பழங்கள் என்று இங்கு பார்க்கலாம்.

வாழைப்பழம்: உடல் எடையை எடை குறைக்க முயற்சிப்பவர்கள் வாழைப்பழத்தை குறைவாக சாப்பிட வேண்டும் என்கின்ற நிபுணர்கள். வாழைப்பழம் ஆரோக்கியத்திற்கு நல்லதாக கருதப்பட்டாலும், அவற்றை அதிகளவில் சாப்பிட வேண்டாம். உண்மையில், வாழைப்பழங்களில் கலோரிகள் அதிக மற்றும் இயற்கை சர்க்கரைகளும் இருக்கும். ஒரு வாழைப்பழத்தில் சுமார் 150 கலோரிகள் உள்ளன. மேலும் பழுத்த வாழைப்பழத்தில் கிளைசெமிக் குறியீடு அதிகமாக இருப்பதால், சர்க்கரை அதிகரிக்கும் மற்றும் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

மாம்பழம்: மாம்பழம் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு பழமாகும். இதன் வழக்கமான நுகர்வு பல நன்மைகளை வழங்கும். ஆனால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், மாம்பழம் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மாம்பழத்தில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், அதில் கலோரிகள் உள்ளடக்கம் அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாக எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இவற்றின் இனிப்பு சுவை காரணமாகவும், அவற்றின் அதிகப்படியான நுகர்வு, இரத்த சர்க்கரைய அளவை அதிகரிக்க வழிவகுக்கும்.

அவகேடோ: உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் அவகேடோ பழம் சாப்பிடுவதை குறைக்க வேண்டும். இந்த பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் இதய நோயாளிகளுக்கு நல்லதாக கருதப்பட்டாலும், நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் அதை சாப்பிடுவதை குறைக்கவும். ஏனெனில், ஒரு நடுத்தர அளவில் ஆன அவகோடா பழத்தில் சுமார் 240 கலோரிகள் உள்ளன. எனவே, நீங்கள் அதை ஆரோக்கிய நன்மைகளுக்காக அதிகம் சாப்பிட்டாலும் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios