Asianet News TamilAsianet News Tamil

‘பொங்கல் பானை’ எப்படி இருப்பது நல்லது? எந்த அடுப்பில் வைத்தாலும் பொங்கல் பானையை எப்படி பார்த்து வாங்கவேண்டும்?

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் வைக்கும் பானைகள் எப்படி இருக்க வேண்டும்? எந்த அடுப்பில் எப்படி வைக்க வேண்டும்? என்பன குறித்த விரிவான தகவல்களை பார்ப்போம்.

here is the detail about pongal pot which is used for pongal festival
Author
Chennai, First Published Jan 16, 2021, 8:16 PM IST

பொங்கல் பானை என்பது ஒரு சிலர் புதிதாக வாங்குவது வழக்கம். பொங்கலுக்கு மண்பானை, வெண்கலம் அல்லது பித்தளை பானை வாங்குவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு சம்பிரதாய முறையாகும். இப்போது இருக்கும் நவீன யுகத்தில் பொங்கல் செய்வதற்கு எவர்சில்வர் பாத்திரத்தையும், ஒரு சிலர் குக்கரை கூட உபயோகிக்கிறார்கள். இது மிகவும் தவறான செயலாகும்.

புதுப்பானையில் பொங்கல் வைப்பது தான் தமிழருடைய பாரம்பரிய சாராம்சமாகும். புதிதாக பொங்கல் வைக்க நினைப்பவர்கள் கட்டாயம் மண்பானையை வாங்குவது நல்லது. அப்படி வாங்கும் பொழுது நிறைய  விஷயங்களை பார்த்து வாங்க வேண்டும். மண்பானை இல்லாவிட்டாலும், பொங்கலை புதுப்பானையில் எப்படி வைக்கலாம்? இதைப் பற்றிய விவரங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தைத்திரு பொங்கல் நாளன்று புதிதாக மண் பானை வாங்க நினைப்பவர்கள், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பானையின் அளவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பானையில் விரிசல்கள் இல்லாமல் இருக்கிறதா? என்பதை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். பானை கனமாகவும் இருக்க வேண்டும். புது பானையை வாங்கும் பொழுது தட்டிப் பார்த்து வாங்க வேண்டும். நன்கு சுட்ட மண் தட்டினால் பலமாக ஓசை வரும். அப்படியான பானையைப் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்.

நீங்கள் புது பானை வாங்கி பொங்கல் செய்யும் பொழுது மண்பானையை முதலில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அப்போது தான் அதில் பூசப்பட்டிருக்கும் மேலே உள்ள மண் கலவைகள் நீங்கி வரும். இல்லை என்றால் பொங்கலில் மண் கலந்து விடும். மண்பானையை தண்ணீரில் ஊறவைத்து எடுத்து உள்ளேயும், வெளியேயும் தேங்காய் நார் அல்லது நீங்கள் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் நாரை உபயோகித்து நன்கு தேய்த்துவிட வேண்டும். இப்படி செய்யும் பொழுது மண் ஒட்டி இருந்தாலும் தனியாக வெளியில் வந்துவிடும். பொங்கலுக்கு முந்தைய நாளே பானையை வாங்கி இப்படி கழுவி காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பொங்கலுக்கு முந்தைய நாளே பானையை வாங்கி இப்படி கழுவி காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

here is the detail about pongal pot which is used for pongal festival

மண்பானை வாங்க முடியாதவர்கள் பித்தளை அல்லது செம்பு பானையை உபயோகித்து பொங்கலை வைக்கலாம். இவையும் இல்லாதவர்கள் எவர்சில்வர் பாத்திரத்தை புதிதாக வாங்கி வைக்கலாம். பொங்கல் செய்யும் பொழுது எச்சில் படாத பானையாக இருப்பது நலமாகும். நம் வாழ்வு காக்க சூரியனுக்கு படைக்கப்படும் இந்த பொங்கல் பானை மிகவும் விசேஷமானது. இதனை புதிதாக எச்சில் படாத பானையாக வாங்கி வைப்பது தான் மிகவும் நல்லது.

புதுப்பானையில் மஞ்சள், குங்குமம் இட்டு அல்லது விபூதி பூசி பூமியில் விளைந்த மஞ்சள் கொத்து பானையின் கழுத்தில் கட்டி விட வேண்டும். பானைக்கு அடியில் கரி பிடிக்காமல் இருக்க மண்ணை நீரில் குழைத்து அடியில் தடவி விடுவார்கள். இதனால் நீங்கள் பானையை தேய்க்கும் பொழுது சுலபமாக இருக்கும். கேஸ் அடுப்பில் பொங்கல் செய்ய நினைப்பவர்கள் முந்தைய நாளே அடுப்பை சுத்தம் செய்து அடுப்படியில் கோலம் போட்டு, கேஸ் அடுப்பிற்கு மஞ்சள், குங்குமம் வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

பொங்கல் அன்று பொங்கல் பானையில் இருந்து தண்ணீர் நுரைத்து வழிந்து கீழே ஊற்ற வேண்டும். அப்போது தான் பொங்கல் பூஜை நிறைவுபெறும். அடுப்பை சுத்தம் செய்ய வேண்டுமே! என்று சோம்பல்பட்டு பொங்கலை கிளறி விட்டு விடாதீர்கள். பொங்கல் பானை பொங்கி வழியும் போது தான், நம்முடைய வாழ்வும் பொங்கி நிறையும் என்பது ஐதீகம்.

Follow Us:
Download App:
  • android
  • ios