கால் ஆணி உள்ள இடத்தில் 'இத' மட்டும் தடவுங்க.. 5 நாட்களில் காணாமல் போகும்!
Foot Corn Home Remedies : இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்தியத்தின் உதவியுடன் கால் ஆணி பிரச்சனையை நீங்கள் எளிதில் குணப்படுத்தலாம். அவை..
கால் ஆணி என்பது பலரையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். நாம் அனைவரும் வாழ்க்கையில் ஒன்று அல்லது இரண்டு முறையாவது இந்த பிரச்சனையை அனுபவித்திருப்போம். கால் ஆணி பொதுவாக அலர்ஜி, உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம், கிருமிகள் போன்றவற்றால் இந்த பிரச்சனை பலருக்கும் வருகிறது. மேலும் தவறான காலணிகள், ஹை ஹீல்ஸ் மற்றும் சில சமயங்களில் வெறுங்காலுடன் நடப்பதாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
கால் ஆணி வந்துவிட்டால் தரையில் கால் வைக்க முடியாத அளவிற்கு வலியையும் வேதனையும் கொடுக்கும். ஆனால், இது ஒரு பெரிய பிரச்சினை என்று நீங்கள் கவலைப்பட தேவையில்லை. இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட நீங்கள் சில வீட்டு வைத்தியத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும். அதன் மூலம் இந்த பிரச்சனை நீங்கி உங்கள் பாதங்கள் மென்மையாக மாறும். சரி வாங்க.. இப்போது இந்த கால் ஆணி பிரச்சனையில் இருந்து விடுபட வீட்டு வைத்தியம் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்..
இதையும் படிங்க: காலில் உள்ள கருமை நீங்க வேண்டுமா..? உடனே 'இந்த' டிப்ஸை ட்ரை பண்ணுங்க..!
கால் ஆணி பிரச்சனையை சரி செய்ய எளிய வழிகள்:
1. கல் உப்பு: கல் உப்பு கால் ஆணி பிரச்சனையை நீக்க உதவுகிறது. இதற்கு வெதுவெதுப்பான நீரை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி அதில் இரண்டு ஸ்பூன் கல் உப்பு சேர்த்து உங்கள் காலை அதில் வைக்கவும் கல் உப்பில் உள்ள பாக்டீரியதற்கு பண்புகள் உங்கள் கால் ஆணியை எளிதில் குணப்படுத்தும்.
2. மஞ்சள்: மஞ்சள் பல சரும பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்குகிறது. இதை பயன்படுத்த ஒரு ஸ்பூன் மஞ்சளில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அந்த பேஸ்ட்டை கால் ஆணியில் தடவி இரண்டு முதல் மூன்று மணி நேரம் கழித்து கலவவும் கழுவவும். மஞ்சளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கால் ஆணியை குணப்படுத்த உதவுகிறது.
3. தேயிலை மர எண்ணெய்: கால் ஆணி பிரச்சனையை நீக்க உதவுகிறது. இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கால் ஆணி பிரச்சனையை எளிதில் நீக்கும். இதை பயன்படுத்த பருத்தியில் இரண்டு முதல் மூன்று சொட்டு தேயிலை மர எண்ணெயை ஊற்றி அதை உங்கள் காலில் தடவவும். இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட்டு, காலையில் எழுந்தவுடன் கால்களை கழுவவும்.
4. வெங்காயம்: வெங்காயத்தில் உள்ள பண்புகள் கால் ஆணியை நீக்க உதவுகிறது இதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு வெங்காய சாற்றை அதில் சேர்க்கவும். பிறகு உங்கள் கால்களை அந்த பாத்திரத்தில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதன் பிறகு புட் கிரீம் தடவுங்கள். இதை நீங்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம்.
5. கற்றாழை: கற்றாழை ஜெலில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது. இது இறந்த சரும செல்களை நீக்கவும், சருமத்தை மென்மையாக்கவும் உதவுகிறது. கால் ஆணி இருக்கும் இடத்தில் புதிய கற்றாழை ஜெல்லை தடவி ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க: Foot Care: பாத வெடிப்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்..? எளிமையான இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்...
6. ஆமணக்கு எண்ணெய்: ஆமணக்கு எண்ணெய் கடினமான சருமத்தை மென்மையாக்கும் ஒரு அற்புதமான மூலப் பொருள் ஆகும். கால் ஆணி உள்ள இடத்தில் இந்த எண்ணெய்யை தடவி இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட்டு, பிறகு மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனை நீங்கள் வாரத்திற்கு நான்கு அல்லது ஐந்து முறை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
7. வைட்டமின் ஈ எண்ணெய்: இது இயற்கையான ஒரு மாய்ஸ்சரைசர் ஆகும். இது சருமத்தில் தேங்கி இருக்கும் இறந்த செல்களை நீக்கவும், கறைகளை அகற்றவும் பெரிதும் உதவுகிறது. கால் ஆணி பிரச்சினை உள்ளவர்கள் இந்த எண்ணெயை தடவி பிறகு காலை சாக்ஸ்சால் மூடி இரவு முழுவதும் அப்படியே வைத்துவிடுங்கள். இதனை நீங்கள் வாரத்திற்கு நான்கு அல்லது ஐந்து முறை செய்தால் விரைவில் குணமாகும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D