Foot Care: பாத வெடிப்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்..? எளிமையான இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்...
Foot Care: பாத வெடிப்புகளில் இருந்து ஏழே நாட்களில் எப்படி பாதத்தை பராமரிப்பது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
foot care
உடலை அழகாக பராமரிப்பதில் கொடுக்கும் முக்கியத்துவம், நம்முடைய பாதத்திற்கு கொடுப்பதில்லை. பாதம் தானே எப்படி இருந்தால் என்ன..? பார்த்து கொள்ளலாம் என்ற எண்ணமே மேலோங்கி காணப்படுகிறது. ஆனால், நாம் அப்படி அலட்சியமாக இருக்க வேண்டாம்..? கொஞ்சம் பாதத்தில் கவனம் செலுத்துவது அவசியம் இல்லையெனில் பாத வெடிப்பு ஏற்பட்டு நமைச்சலையும், வலியையும் உண்டாக்கும். எனவே, பாத வெடிப்புகளில் இருந்து ஏழே நாட்களில் எப்படி பாதத்தை பராமரிப்பது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
foot care
பாதத்தை கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரில் கல் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சிறிது எலுமிச்சை, மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளலாம். அதில் சிறிது நேரம் கால்களை வைத்திருந்தால் கால்களில் இருக்கும் அயர்ச்சி நீங்கி வலியானது கட்டுக்குள் வந்துவிடும். இதனால் கால்களில் இருக்கும் கிருமிகள் பாத வெடிப்பை ஏற்படுத்தாமல் இருக்கும்.
foot care
மருதாணி இலையுடன் கிழங்கு மஞ்சளைப் பொடியாக்கி, பாதங்களை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்து இரவு நேரங்களில் உறங்க செல்வதற்கு முன்பு வெடிப்பு இருக்கும் இடங்களில் பற்று போடுங்கள். அவை காய்ந்ததும் சுத்தமாக கழுவி எடுங்கள். வாரத்துக்கு இரண்டு நாட்கள் இப்படிச் செய்துவந்தால் நாளடைவில் வெடிப்பு மறைய தொடங்கும்.
foot care
மெழுகுவர்த்தி தூள் எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் அளவுக்கு கற்றாழை ஜெல் சேர்த்துக் கொள்ளுங்கள். கற்றாழை ஜெல்லுடன் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இரண்டையும் கலந்து விடுங்கள். பின்னர் அடுப்பில் வைத்து சூடேற்றினால் நன்கு கரைய ஆரம்பிக்கும், கரைந்து கிரீம் போல நமக்கு கிடைத்துவிடும். இதனை கால்களில் தடவினால் காலுக்கு நிவாரணம் கிடைக்கும். பாதத்தில் இருக்கும் வெடிப்புகளை மறைய செய்து, நோய் கிருமிகள் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்கும்.