Asianet News TamilAsianet News Tamil

உங்கள் குழந்தையிடம் பாசிட்டிவ் அணுகுமுறையை வளர்ப்பதற்கான எளிய டிப்ஸ் இதோ..

ஒரு குழந்தை ஆரோக்கியமான மற்றும் நிலையான சூழலில் வளர, நீங்கள் சில ஒழுக்கமான நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Here are some simple tips to develop a positive attitude in your child Rya
Author
First Published Oct 2, 2023, 4:24 PM IST

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சிக்கலான பணி என்பதில் சந்தேகமில்லை. பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளையை வளர்க்கும் போது பல ஏற்ற, இறக்கங்களை சந்திக்க நேரிடலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு ஒழுக்கத்தைக் கற்பிப்பது, கோபப் பிரச்சினைகளைக் கையாள்வது அல்லது தங்கள் குழந்தை மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்வது போன்ற கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். குழந்தை வளர்ப்பு என்பது பரிணாம வளர்ச்சியடையும் ஒரு செயல்முறையாகும். எனவே ஒரு குழந்தை ஆரோக்கியமான மற்றும் நிலையான சூழலில் வளர, நீங்கள் சில ஒழுக்கமான நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

உங்கள் குழந்தை கோபம் கொண்டாலோ அல்லது ஓயாமல் அழுது கொண்டிருந்தாலோ அவர்களை எப்படி கையாள்வது என்று பல பெற்றோருக்கும் தெரிவதில்லை. ஆனால் குழந்தையுடன் கண் மட்டத்தில் பேசுவது நல்லது என்று பொதுவாகக் கருதப்படுகிறது, உதாரணமாக, உங்கள் குழந்தை நின்று கொண்டிருந்தால், தரையில் உங்கள் குழந்தையின் கண்களை பார்த்து பேச வேண்டும். குழந்தை தனது எல்லா உணர்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ள பாதுகாப்பான இடத்தில் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும், மேலும் நீங்கள் குழந்தையை திருத்துவதற்கு முன் குழந்தை உடனான பிணைப்பு முக்கியம். எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று உறுதியானவுடன், அவர்கள் அமைதியாகி, நீங்கள் சொல்வதில் கவனம் செலுத்துவார்கள்.

குழந்தைகளின் மனரீதியான பிரச்சனைகளை தீர்க்க உதவும் டிப்ஸ் இதோ.. பெற்றோர்களே ப்ளீஸ் நோட்..

குழந்தைகளிடம் பேசும் போது பெற்றோர்கள் சில விஷயங்களை சொல்வதன் மூலம் அவர்களின் பாசிட்டிவ் அணுகுமுறையை வளர்க்க முடியும். அதாவது, நீ ஒரு அற்புதமான குழந்தை, நான் உன்னுடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அதே போல் உனது எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் கருத்துக்கள் என்னுடையதில் இருந்து வேறுபட்டாலும், நீங்கள் பகிர்ந்து கொள்ளும்போது நான் விரும்புகிறேன் என்று குழந்தையிடம் கூற வேண்டும். 

“ஒவ்வொரு முறையும் நீ முயற்சி செய்யும்போது, கடினமானதைச் சாதிப்பதற்கு ஒரு படி மேலே செல்கிறாய், எனவே இதை உன்னால் செய்ய முடியும், “உன்னைப் போலவே இருந்தால் போது. நீ மாற வேண்டியதில்லை.” என்று அவ்வப்போது குழந்தை தேவையான ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்க வேண்டும். மேலும் வேறு யாரின் மீதோ உள்ள கோபத்தை குழந்தையிடம் காட்டிவிட்டால் பின்னர் அதற்கு வருத்தம் தெரிவிவிக்க வேண்டும். அப்போது "என் உணர்ச்சிகளுக்கு நீங்கள் பொறுப்பல்ல. நான் அப்படி நடந்து கொண்டதற்கு வருந்துகிறேன். அதற்கு நீங்கள் தகுதியானவர் அல்ல." என்று கூற வேண்டும். இதை எல்லாம் சொல்வதன் மூலம் குழந்தையிடம் பாசிட்டிவ் அணுகுமுறையை வளர்க்க முடியும் என்று குழந்தை நல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios