என்னப்பா இது... ஒரு எட்டு கூட நகர முடியல... வழி விடுங்க அமைச்சரே...! பெருமூச்சு விட்ட கிருஷ்ணகிரி மக்கள்..!

கிருஷ்ணகிரியில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியால் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனை நிலையம் ஒரு கோடியே 62 லட்ச ரூபாய் மதிப்பில் ஆரம்பிக்கப்பட்டு அதன் துவக்க விழா நேற்று  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜூ கலந்து கொண்டு துவக்கி வைத்தார். 
தொடர்ந்து 13 கோடியே 44 லட்சத்து 50ஆயிரத்து 9 ஆயிரம் மதிப்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவுகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்றது. அமைச்சர் வருகையால்,  அமைச்சரை வரவேற்க வந்த அதிமுக தொண்டர்களின் வாகனங்கள் சாலைகளின் குறுக்கே ஆங்காங்கே நிறுத்தி விட்டு சென்றுவிட்டனர்.

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் காவேரிப்பட்டினம் - போச்சம்பள்ளி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.காலை நேரம் என்பதால் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி செல்லும் 10க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.

மேலும் இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்பவர்களும் இந்த நெரிசலில் சிக்கி தவித்தனர். போக்குவரத்து காவலர்கள் யாரும் இல்லாததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கபட்டு பள்ளிக்கு செல்வோர், வேலைக்கு செல்வோர் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.