கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி தெலுங்கானாவில் ஆலங்கட்டி மழை பெய்தது என ஒரு சில புகைப்படமும், அது குறித்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. ஆனால் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்ட ஆலங்கட்டி மழை குறித்த புகைப்படங்கள் வெவ்வேறு இடங்களில் நடந்தவை என்பது பின்னர்தான் தெரியவந்தது. 

அந்த செய்தியில் இடம் பெற்று இருந்த புகைப்படத்தில் ஒன்று அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்துள்ளதாக சில முகநூல் பதிவுகள் உள்ளது.

மற்றொரு புகைப்படம் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9GAG வெப்சைட்டில் வெளியாகி உள்ளது.

அதே போன்று தெலுங்கானாவில் பெய்த ஆலங்கட்டி மழை என வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் முகநூலில் பகிர்ந்தும் இருந்தனர். ஆனால் அந்த வீடியோ 2018 ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி பங்களாதேஷில் பெய்த ஆலங்கட்டி மழை என யூடியூபில் பதிவிடப்பட்டு உள்ளது 

ஆக இவை அனைத்தும் வெவ்வேறு இடங்களிலிருந்து வெவ்வேறு கால நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பது தான் உண்மை என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் இதற்கு மாறாக அன்றைய தினத்தில் தெலுங்கானாவில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை மட்டுமே பெய்து உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.