கொட்டித்தீர்க்கப்போகும் மழை..!  குடையோடு வெளியே போங்க...! 

கோவை மற்றும் நீலகிரி பகுதியில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக விழுப்புரம் காஞ்சிபுரம் ராமநாதபுரம் தூத்துக்குடி வேலூர் திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை பெய்வதும் சில நேரங்களில் மட்டும் கனமழை பெய்து வருவது வாடிக்கையாக உள்ளது.

இருப்பினும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் பல இடங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பொருத்தவரையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜாரில் 11 சென்டி மீட்டர் மழையும் கோவை மாவட்டம் வால்பாறையில் ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சில நேரங்களில் சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்கிறது. கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் மூன்று முறை சென்னையில் மாலை நேரத்தில் மிதமான முதல் ஓரளவிற்கு நல்ல மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக அண்ணா நகர், கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் மாலை நேரத்தில் நல்ல மழை பெய்தது. ஆனால் இன்று சென்னையில் காலை முதலே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக தான் உள்ளது.