9 மாவட்டங்களில்  கனமழை எச்சரிக்கை...! 17 ஆம் தேதி முதல் வடக்கிழக்கு பருவமழையும் கூட...!

திருப்பூர் திருநெல்வேலி நாகை தஞ்சை கன்னியாகுமரி தர்மபுரி நாமக்கல் சேலம் ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் பொதுவாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொடைக்கானலில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை வரும் 17ம் தேதி முதல் தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் மேலும் எதிர்பார்த்ததை விட வடகிழக்கு பருவமழை ஓரளவிற்கு தான் இந்த ஆண்டு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்ப நிலையைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும் இன்றைய பதிவாக கூடும் என ரிவிக்கப்பட்டுள்ளது