இன்னும் 4 நாளுக்கு வெளுத்து வாங்கப்போகுது மழை....! உஷார் மக்களே..! 

கடந்த 16ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் ஓரளவிற்கு மிதமான மழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் தேவாலயம் 13 சென்டிமீட்டர் மழையும், திண்டுக்கல் வேடசந்தூரில் 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்து வரும் 2 தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பாக கனமழை பொருத்தவரையில் குமரி, நெல்லை, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என்றும் வடகிழக்கு பருவமழை அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு தொடரும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் 19, 20, 21 ஆகிய தேதிகளில் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.