Asianet News TamilAsianet News Tamil

வாங்கி 2 நாட்களான காளான்களை சமைத்து சாப்பிடுவது நன்மையா? தீமையா?

சைவ ப்ரியர்கள் பலரும் காளானை விரும்பு உண்கின்றனர். அசைவ ப்ரியர்கள்  மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணியை விரும்புவது போன்று சைவ பிரியர்கள் பலரும் காளான் கொண்டு செய்யப்பட்ட பிரியாணியை அதிகம் விரும்புகின்றனர். இந்தியாவைப் போன்று பல்வேறு நாடுகளில் காளான்கள் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அதனை பல நாடுகள் இறைச்சியாகவே கருதுகின்றனர். காய், இறைச்சி போன்று அல்லாமல் இதனுடைய சுவை தனித்து இருக்கும். சமைப்பதற்கும் மிகவும் எளிது. இதை எப்படி சமைத்து சாப்பிட்டாலும் ருசியாக இருக்கும். பல்வேறு ஊட்டச்சத்துக்களை நிறைந்து காணப்படும் காளான்களில், சுயதொழில் முன்னேற்றத்துக்கு முக்கிய பங்காக விளங்குகிறது.

health benefits of mushroom and tips for cooking process
Author
First Published Sep 29, 2022, 3:25 PM IST

இந்தியாவில் மட்டும் 2000 காளான் இனங்கள்

காளான்களில் நல்ல காளான் மற்றும் கெட்ட காளான் என இரண்டு வகை உள்ளன. அதில் நல்ல காளான்களை நாம் உணவாக சமைத்து சாப்பிடுகிறோம். சில வகை காளான்கள் நச்சுத்தன்மையுடன் வளர்கின்றன. இதை தெரியாமல் உண்டுவிட்டால் பல்வேறு உடல்நலன் சார்ந்த பிரச்னைகள் உருவாகும். ஒரு சில காளான்கள் மனித உயிருக்கே ஆபத்தாக அமையும். இந்தியாவில் மட்டும் நாய்க் குடைக் காளான், முட்டைக் காளான், சிப்பிக் காளான், பால் காளான், பூஞ்சைக் காளான் உள்ளிட்ட 2000 வகை காளான்கள் கண்டறியப்பட்டுள்ளது. நம் நாட்டில் காளான்கள் அதிகம் வளரும் பகுதியாக சிக்கிம் உள்ளது. அதேபோன்று உலகளவில் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வகையிலான காளான்களை மக்கள் உணவாக சாப்பிடுகின்றனர் என்று ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

காளான்களில் இருக்கும் ஊட்டச்சத்து

காளான்கள் மூலம் கிடைக்கும் சத்துக்களை வேளாண் உற்பத்திப் பொருட்களை பரிசோதிக்கும் ஆய்வகத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு வகையான காளான்களை பொறுத்து சத்துகளில் மாறுபாடு இருக்கும்.  அதிக அளவு புரதச்சத்தும் மிகக் குறைந்த அளவு கொழுப்புச்சத்தும் இதில் இருக்கிறது. மேலும் சர்க்கரைச் சத்து, அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புகள், நார்ச்சத்து, சாம்பல் சத்து, வைட்டமின்கள் போன்றவையும் காளான்களில் காணப்படுகின்றன. மேலும் ஜப்பான், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் பலர், புற்றுநோய்கள் வராமல் தடுக்க காளான்களை உணவாக சாப்பிட பரிந்துரைக்கின்றனர். பல ஊட்டச்சத்து நிபுணர்கள், கேரட், தக்காளி, காலிஃபிளவர், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், வாழைப்பழம், ஆப்பிள், பட்டாணி இவற்றைக் காட்டிலும், காளானில் கூடுதலாகப் புரதச்சத்து உள்ளது என்று கூறுகின்றனர்.

காளான்களை சாப்பிடும் முறை

இன்று காளான்கள் பாக்கெட் வடிவில் கிடைக்கின்றன. மக்கள் பலரும் பாக்கெட்டில் விற்கப்படும் காளான்களை தான் அதிகம் வாங்குகின்றனர். பொதுவாக பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் காளான்களை இராண்டு நாட்களை வரை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம் என்று கடைக்காரர்கள் கூறுகின்றனர். ஆனால் ஃப்ரீசரில் வைக்கக்கூடாது, அதேபோன்று வெளியிலும் வைக்கக்கூடாது. மறந்தும் காளான்களை வெளியிலோ அல்லது ஃப்ரீசரில் வைத்துவிட்டால் கருத்துவிடும். குறிப்பிட்ட காளான்களை சாப்பிடும் போது ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். எல்லோருக்கும் எல்லாவிதமான காளான்களும் ஒத்துபோகும் என்று சொல்லிவிட முடியாது. காளான்கள் சாப்பிட்டுவிட்டு தோலில் அரிப்பு, தடிப்பு போன்றவை ஏற்பட்டால், குறிப்பிட்ட காளான் வகைகளை தெரிந்துகொண்டு அதை தவிர்த்துவிடுவது நல்லது.

health benefits of mushroom and tips for cooking process

காளான்கள் கொண்டு உடல் எடையை குறைக்கலாம்

உங்களில் யாராவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருந்தால், அப்படிப்பட்டவர்கள் தினசரி ஒருவேளை காளானை உங்களுடைய உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உடல் எடை விரைவாக குறையும். அதேபோன்று, காளான்களுக்கு பொட்டாசியம் சோடியத்துக்கு எதிர்வினை ஆற்றும் சத்துண்டு. அதிகளவிலான ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடியவர்களும், காளான்களை பக்குவமாக சமைத்து சாப்பிடலாம். இதன்மூலம் விரைவாக ரத்தக் கொதிப்பு கட்டுக்குள் வரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சிங்கப்பூரில் இயங்கி வரும் தேசிய பல்கலைக்கழகம் குறிப்பிட்ட மக்களுக்கு வாரம் இருமுறை காளான்களை உணவாக வழங்கி ஆய்வு நடத்தியது. அதன்மூலம் அவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும் திறன் தெரியவந்தது.

காளான் மூலம் இயற்கையான முறையில் முகப்பொலிவு கிடைக்கிறது

வெறும் உணவு மற்றும் ஊட்டச்சத்து கொண்டதாக மட்டுமில்லாமல், காளான்கள் புற அழகை பராமரிக்கவும் பெரிதும் உதவுகிறது. இதிலுள்ள எர்கோதயோனைன் மற்றும்  குளூட்டோதயான் என்கிற சத்து சருமத்துக்கு பொலிவை தரும். தொடர்ந்து சரியான முறையில் காளான்களை சமைத்து சாப்பிட்டு வருபவர்கள் வயது அதிகரித்தாலும் இளமையான தோற்றத்தில் இருப்பார்கள். அழகுக்காக காளான்களை பயன்படுத்தும் போது, அதை எப்படி சமைத்து சாப்பிடுவது என்பது முக்கியத்துவம் பெறுகிறது. காளான்களை எண்ணெய்யில் வதக்கி சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதிலும் ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தி சமைத்தால் கூடுதல் சிறப்பாக அமையும். பொறித்து, வறுத்து சாப்பிடுவதை காட்டிலும், காளான்களை ஆலிவ் எண்ணெய் கொண்டு சமைத்தால் ஊட்டச்சத்து உடலுக்கு நிறையச் சேரும்.

Follow Us:
Download App:
  • android
  • ios