இந்த பதிவில் கொத்தவரங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
நம் வீட்டில் வாங்கும் காய்கறிகளில் சிலவற்றை தான் நாம் விரும்பி சாப்பிடுகிறோம். பலவற்றை அவற்றின் அருமை தெரியாமலே ஒதுக்கி வைத்து விடுகிறோம். அப்படி ஏராளமான சத்துக்கள் இருந்தும், நாம் சாப்பிடாமல் இருக்கும் முக்கியமான காய்கறிகளில் ஒன்றுதான் கொத்தவரங்காய் (cluster beans). அதோட அற்புத பலன்களை தெரிந்தால் இனி ஒதுக்கி வைக்காமல் அடிக்கடி சாப்பிடுவீங்க. வாங்க இப்போ கொத்தவரங்காயின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிஞ்சுக்கலாம்.
கொத்தவரங்காய் ஆரோக்கிய நன்மைகள் :
1. நீரிழிவு நோய் :
சர்க்கரை நோயாளிகளுக்கு கொத்தவரங்காய் வரப்பிரசாதம். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் நார்ச்சத்து மற்றும் பிற சத்துக்கள் உள்ளதால் அவை ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுவதாக சொல்லப்படுகின்றது.
2. எடை இழப்பு
கொத்தவரங்காயில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் அல்லது ஆரோக்கியமான எடையை பராமரிக்க விரும்புவருக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.
3. இதயத்திற்கு நல்லது
கொத்தவரங்காயில் இருக்கும் பொட்டாசியம் இதயத்தை பாதுகாக்கவும், கொழுப்பைக் கரைத்து வெளியேற்றவும், இரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும் உதவுகிறது.
4. செரிமானத்திற்கு
கொத்தவரங்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இது சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை வரவே வராது.
பிற நன்மைகள் :
- கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால் அவை எலும்புகளை வலுப்படுத்த பெரிதும் உதவுகிறது. மேலும் இதில் மிகுந்து காணப்படும் சுண்ணாம்பு சத்து எலும்பு தேய்மானம் மூட்டு வலியை போக்கும்.
- இரும்புச்சத்து நிறைந்த கொத்தவரங்காய் ரத்த சோகையை தடுக்க உதவுகிறது. சேர்த்துக் கொண்டால் ரத்த ஓட்டம் சீராகும் ஹீமோகுளோபின் உற்பத்தியும் அதிகரிக்கும்.
- கருவுற்ற பெண்களின் உடல் நலம் மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு இது உதவுகிறது.
- மன உளைச்சல், படபடப்பை போக்கவும், ஆசனவாய் புற்றுநோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
- கொத்துவரங்காயை வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி சமைத்துக் கொடுத்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கொத்தவரங்காயை உணவில் எப்படி சேர்த்துக் கொள்வது?
1. கொத்தவரங்காயை கூட்டு, பொரியல், கிரேவி, மசியல் என பல ரெசிபிகள் செய்து சாப்பிடலாம். அவியல், சாம்பார் போன்ற உணவுகளில் கூட இதை சேர்த்துக் கொள்ளலாம்.
2. இதை வேக வைத்துக் கூட சாலட்களில் சேர்க்கலாம்.
3. கொத்தவரங்காய் ஜூஸ் போட்டு கூட குடிக்கலாம்.
