ஹேசல்நட்ஸ்! பாதாம், முந்திரி கூட இது முன்னாடி தோத்து போயிடும்; அவ்வளவு சத்துக்கள் இருக்கு!

Hazelnuts Benefits : நட்ஸ்களின் பட்டியலில் ஹேசல்நட்ஸ் அடங்கும். இது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும். அதை பற்றி இங்கு காணலாம்.

health benefits of hazelnuts in tamil mks

நட்ஸ்கள் நம் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. அதனால்தான் அதை தினமும் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். நட்ஸ்களில் பாதாம், பிஸ்தா, முந்திரி வால்நட் போன்றவற்றை நீங்கள் சாப்பிட்டு இருப்பீர்கள். அந்த லிஸ்டில் ' ஹேசல்நட்ஸ்' அடங்கும். 

ஆம், இதுவும் உலர் பழங்களில் ஒன்றாகும். பொதுவாக இதைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஆனால் இது பாதாம், முந்திரியை விட மிகவும் சக்திவாய்ந்தவை தெரியுமா? இதுவும் பிற நச்சுக்களை போலவே பச்சையாகவோ அல்லது வருத்தோ சாப்பிடலாம் இது சாப்பிடுவதற்கு சுவையாகவும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சொல்லப்போனால் இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம்மை பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. எனவே, ஹேசல்நட்ஸ் சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

இதையும் படிங்க:  பிஸ்தாவை ஏன் தினமும் உங்கள் உணவில் சேர்க்க வேண்டும்? 6 காரணங்கள் இதோ..

ஹேசல்நட்ஸ்

ஹேசல்நட்ஸில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதாவது புரதம், தாமிரம், மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, ஃபோல்ட், வைட்டமின் பி6, ஒமேகா 6, ஒமேகா 9 கொழுப்பு அமிலங்கள் போன்றவை உள்ளன. அவை உங்களது ஆரோக்கியத்திற்கும் மற்றும் சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.

இதையும் படிங்க: Benefits of Cashews: முந்திரி சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்குமா? வாங்க தெரிஞ்சிகலாம்..!!

ஹேசல்நட்ஸின் ஆரோக்கிய நன்மைகள்:

1. இதயம் பலப்படும்:

நிபுணர்களின் கூற்றுப்படி, ஹேசல்நட்ஸில் இருக்கும் நிறைவுறா கொழுப்பு அமிலம் இதயத்தை பலப்படுத்த உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய நோய் அபாயத்திலிருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. முடிவாக, ஹேசல்நட்ஸ் இதயத்திற்கு ரொம்பவே நல்லது என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர்.

2. எலும்புகள் வலுவடையும்:

ஹேசல்நட்ஸில் எலும்புகளை வலுப்படுத்த தேவையான மெக்னீசியம் ஏராளமாக உள்ளது இது தவிர இதில் தாமிரம் உள்ளது இது இரும்பை உறிஞ்சுவதற்கு முக்கி பங்கு வகிக்கிறது.

3. வீக்கத்தைக் குறைக்கும்:

ஹேசல்நட்ஸில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் வீக்கம் தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். உங்களுக்கு வீக்கு தொடர்பான ஏதுன்னு பிரச்சனை இருந்தால் இந்த பருப்பை நீங்கள் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாம்.

4. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்:

ஹேசல்நட்ஸ் மிகவும் குறைந்த அளவு கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால் இது சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது மற்றும் இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

5. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்:

இதில் நல்ல அளவு பொட்டாசியம் உள்ளதால் இது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

6. எடையை குறைக்க உதவும்:

ஹேசல்நட்ஸை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்களது எடையை இது குறைக்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் உள்ளது. முக்கியமாக இதை நீங்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் இதில் இருக்கும் நார்ச்சத்து உங்களது பசியை கட்டுப்படுத்தும். மேலும் நீங்கள் அதிகம் சாப்பிடுவதை தடுக்கும். இதனால் உங்களது எடை கற்றுக் கொண்டிருக்கும்.

7. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

ஹேசல்நட்ஸில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும.  இது தவிர இது உங்களை காய்ச்சலில் இருந்து விலக்கி வைப்பதோடு மட்டுமின்றி, வேறு எந்த தொற்று நோய்களும் உங்களுக்கு ஏற்படாமல் தடுக்கிறது.

8. மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும்:

ஹேசல்நட்ஸில் மக்னீசியம், போஃலேட், நார்ச்சத்து போன்றவை இருப்பதால் அவை மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும் மற்றும் செரிமான அமைப்பை மேம்படுத்த பெரிதும் உதவும். இது தவிர இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios