Asianet News TamilAsianet News Tamil

இது தெரிந்தால் இனி கொத்தமல்லி சாப்பிடுவதை நிறுத்தவே மாட்டீங்க..! அற்புதமான 5 மருத்துவ நன்மைகள்!

கொத்தமல்லியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை இருப்பதால், உணவில் கட்டாயம் சேர்த்து கொள்வது நல்லது.

Health benefits of coriander seeds
Author
Chennai, First Published Jan 17, 2022, 7:18 AM IST

கொத்தமல்லியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை இருப்பதால், உணவில் கட்டாயம் சேர்த்து கொள்வது நல்லது.

கொத்தமல்லி ஒரு பிரபலமான மருத்துவ தாவரங்களில் ஒன்றாகும். கொத்தமல்லி தலை முதல் கல் வரை உள்ள இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப்பயன் கொண்டவை. நம் சமையலறையில் இருக்கும் முக்கியமான உணவு பொருளில் கொத்த மல்லியும் ஒன்றாகும். இதன் இலைகள் மற்றும் விதைகள் உணவு தயாரிப்பு, மருந்து பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்களில் பயன்படுத்தப்படுகிறது. தமிழரின் பாரம்பரிய சமையலில், கொத்தமல்லி இன்றியமையாததாகும்.

Health benefits of coriander seeds

 கொத்தமல்லி விதை, இந்திய சமையலறையில் குழம்புகள், சூப்கள், தின்பண்டங்கள், பொரியல் மற்றும் பல உணவுகளை சுவைக்க ஒரு நறுமண மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. விதைகள் முக்கியமாக உலர்ந்த வடிவத்தில் பயன்படுத்தப்படுகின்றன அல்லது தூள் செய்யப்படுகின்றன. 
 
கொத்தமல்லி விதையின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இந்தப்பதிவில் பார்ப்போம். 

கொத்தமல்லி விதை செரிமான பிரச்சனைகள் முதல் தோல் பிரச்சனைகள் மற்றும் மாதவிடாய் முறைகேடுகள் முதல் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் வரை பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

கொத்தமல்லி விதையை வாயில் வைத்து மென்று உமிழ்நீரை இறக்கினால் சில நேரங்களில் பல் இடுக்குகளில் உள்ள கிருமிகளாலும், குடல் அல்லது வயிற்றுப்  புண்களாலும் வர கூடிய வாய் துர்நாற்றம் நீங்கும்.பித்தத் தலைவலி உள்ளவர்கள் சந்தனத்துடன் கொத்தமல்லியை அரைத்து ஒத்தடம் கொடுத்தால் பித்தம் தணிந்து தலைவலி குணமாகும்.

கொத்தமல்லி இலையில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தசோகை வருவதற்கான வாய்ப்புக் குறைகிறது. உடலின் ஆற்றலை அதிகரிக்க, எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு, உறுப்புக்களின் இயல்பான இயக்கத்துக்கு என்று பெரிதும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையை அதிகரிக்கிறது.

இதய நோய்கள் ஏற்படாமல் இருக்க அடிக்கடி உணவில் கொத்தமல்லி விதைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொத்தமல்லி விதை பொடியை தொடர்ந்து உபயோகப்படுத்தும் போது எளிதில் ஜீரணமாகாத உணவுகளை சாப்பிட்டாலும் ஜீரணமடைய செய்யும்.

இன்சுலின் சுரப்பையும் கொத்தமல்லி இலை தூண்டுகிறது. இதன்மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வருகிறது. எனவே, சர்க்கரை நோயைத் தவிர்க்க விரும்புகிறவர்கள், சர்க்கரை நோயாளிகள் கொத்தமல்லி இலையைத் தினமும் சேர்த்துக்கொள்ளலாம்.

கொத்தமல்லி நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம். வாயு பிரச்சனையை குணமாக்கும்.

Health benefits of coriander seeds

கொத்தமல்லி விதைகளில் லினோலெனிக் அமிலம் நிரம்பியுள்ளது. இது புற ஊதா கதிர்களால் தூண்டப்படும் எரித்மாவுக்கு எதிரான சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. எரித்மா இரத்த நுண்குழாய்களின் வீக்கத்தால் ஏற்படும் தோல் வெடிப்புகளால் வகைப்படுத்தப்படுகிறது. தோலில் வெடிப்புகள் சரியாக, தனியா கஷாயம் செய்து அருந்தவும். ஒரு தேக்கரண்டி விதைகளை கொதிக்கச் செய்து, விழுதாக்கி அதன் மீது தடவவும். அரிக்கும் தோல் அழற்சி பருக்கள் மற்றும் கொப்புளங்கள் போன்ற தோல் நிலைகளுக்கு சிகிச்சையளிப்பதில் கொத்தமல்லி விதைகள் பலனளிக்கும் என்று  சமீபத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. எனவே, கொத்தமல்லி இலையை தினமும் அளவோடு உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது.

Follow Us:
Download App:
  • android
  • ios