குழந்தைகள் இரண்டு வயதை எட்டும் போது அவர்கள் பார்க்கும் விஷயங்கள் மற்றும் மனிதர்கள் என அனைத்தையும் தன்னில் பிரதிபலிக்க முயல்வர். குழந்தைகள் எந்தெந்த விஷயங்களை கற்று கொள்கிறார்களோ அது அவர்களின் மனதில் ஆழமாக பதிந்து அதுவே அவர்களின் குணநலனாக மாறிவிடும்.

2 வயது முதல் 3 அல்லது 4 வயது வரை நல்ல விஷயங்களை கற்றால் அது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். 

கோபம், பொறாமை, புறம்பேசுதல் போன்ற விஷயங்களை கற்று கொள்ள நேர்ந்தால், பொறாமை குணம் நிறைந்தவராக, தீய எண்ணம் கொண்ட குழந்தையாக மாறிவிட வாய்ப்புகள் உள்ளன.

எப்படி அறிவது?

இந்த டெரிபிள் 2 சிண்ட்ரோம் குழந்தையில் ஏற்பட தொடங்கி விட்டதை அறிய குழந்தையின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிப்பது அவசியம்.

குழந்தைகள் நன்கு சிறிது விளையாடி பாசமாக இருக்கும் பொழுது திடீரென கோபமாக மாறி அழுவது, எல்லாவற்றிற்கும் அழுது அடம்பிடிப்பது - கோபப்படுவது, எல்லாரின் கவனத்தையும் ஈர்க்க நல்லதோ - கெட்டதோ எதையாவது செய்வ்து குழந்தை நிலைக்கு மாறாக நடந்து கொள்வது போன்றவை இதன் அடையாளம்.

விளைவு என்ன?

இவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டால் 2 முதல் 4 வயதில் கற்ற விஷயங்களையே வாழ்நாளில் கடைபிடிக்க தொடங்குவர். பெற்றோர் திருத்த தவறி விட்டால், பிள்ளைகள் அதையே சரி என்று நினைத்து கொள்வர். 

சரியாகி விடுமா?

இந்த டெரிபிள் 2 சிண்ட்ரோம் குழந்தைகள் 4 வயதை கடக்கும்போது சரியாகும் என்று கூறப்பட்டாலும் இந்த வயதில் சில சம்வபவங்கள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால் அவை மனதில் நிலைத்து விடும். 

வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய விஷயம் வெளிப்பட்டுவிடும்.

பெற்றோர் கடமை!

டெரிபிள் 2 சிண்ட்ரோம் விளைவை விலக்க குழந்தைகள் தவறான நடவடிக்கையை வெளிப்படுத்தும் பொழுது, அதனால்  என்ன நிகழும் என்பதை எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும். குழந்தைகளின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து, அந்தந்த நேரத்திலேயே திருத்த வேண்டும்.

குழந்தையை திருத்த மேற்கொள்ளும் முயற்சிகல் வன்முறையாக இருக்க கூடாது - அன்பான முறையில் எடுத்து சொல்லி திருத்த வேண்டியது அவசியம்.