good way to destroy the mosqutoa
தமிழகத்தில் அதிக அளவில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கு காரணமான கொசுவை ஒழிப்பதில் அரசு மும்முரம்காட்டி வருகிறது . இருந்தபோதிலும்,கொசுவினால் ஏற்படும் டெங்குவை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் நிலவி வருகிறது.
நிலவேம்பு கசாயம் வீடு தோறும் கொடுக்கப்பட்டு வருகிறது..தினமும் இந்த கசாயத்தை பருகினால்,டெங்குவிலிருந்து விடுபட அதிக வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுவும்நம்முன்னோர்கள் சொன்னது தானே .....
டெங்கு வந்தவுடன் என்ன செய்வது என்பதை விட, வருமுன் காப்பது சிறந்தது அல்லவா....எனவே அதற்கு காரணமான கொசுவை முதலில் ஒழிப்போம்....
கொசுவை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் ?
1ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.
2. பிறகு 250 மில்லி சுத்தமான வேப்பை எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.
3. இரண்டு எண்ணெய்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
4. பிறகு மாலை 6 மணி முதல் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு அறையிலும் ஒரு அகல் தீபத்தில் இந்த எண்ணெயை ஊற்றி , பஞ்சு திரிக்கொண்டு தீபமேற்றுங்கள் !!!
5.நீங்கள் கற்பனை செய்ய இயலாது ஆனால் உண்மை, கொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது !!!
6.விளக்கு நின்று நிதானமாக எரியும் !!!
7.இது உடலுக்கு மிகவும் உகந்தது !!! கொசு விரட்டி சுருள்கள் மற்றும் இயந்திரங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் !!!
நம்முன்னோர்களின் சில செயல்கள் மூடநம்பிக்கை என்று நாம் எண்ணி கைவிட்டதின் விளைவு ,இன்று டெங்கு காய்ச்சல் , மலேரியா , சிக்குன்குனியா போன்ற புது புது வைரஸ் காய்ச்சல் தான் தற்போது வரபிரசாதமாக உள்ளது
