உடலில் கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு இருந்தால் நல்லது? அதிகமானால் குறைக்கும் எளிமையான வழிகள் என்ன?

கொலஸ்ட்ரால் நம் உடலுக்கு குறிப்பிட்ட அளவுக்கு தேவைப்படுகிறது. அதை பற்றி முழுமையாக காணலாம்.

good cholesterol levels and improving ways

இதய ஆரோக்கியம் நன்றாக இருக்க வாழ்க்கை முறை, உணவு பழக்கம் முக்கிய காரணியாக உள்ளது. அதே நேரம் ஆரோக்கியமான செல்கள் உருவாக உடலுக்கு கொலஸ்ட்ரால் தேவையும் உள்ளது. உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருப்பது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். 

உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவம் உருவாகும். இந்த கொழுப்பு படிவம் நம் உடலில் மெழுகு போன்ற பொருளாக காணப்படும். இதனால் நம் உடலில் தமனிகள் வழியாக ரத்தம் பாய்வதற்கு இடையூறு ஏற்படும். சில வேளைகளில் கொழுப்பு படிவங்கள் உடைந்து மாரடைப்பை கூட ஏற்படுத்தலாம். சிலருக்கு பக்கவாதம் வர கூட வாய்ப்புள்ளது. நமக்கு அதிகமான கொலஸ்ட்ரால் இருப்பது பரம்பரை நோயாகக் கூட இருக்கலாம். 

எப்படி கொலஸ்ட்ராலை குறைக்கலாம்? 

நல்ல ஆரோக்கியம் அளிக்கும் உணவு, தினமும் உடற்பயிற்சி, சில நேரங்களில் நாம் மருந்துகள் மூலம் கூட அதிக கொழுப்பைக் குறைக்கலாம். ஆனால் இதற்கு மருத்துவ ஆலோசனை தேவை. தன்னிச்சையான முடிவுகளால் மருந்து எடுக்கக் கூடாது. நமது உடலில் அதிக கொழுப்பு இருப்பதை வெளிப்படையாக அறிகுறிகள் வெளிப்படுத்தாது. ரத்தப் பரிசோதனை தான் அதை நமக்கு காட்டும் ஒரு வழி. 

எப்போது பரிசோதிக்க வேண்டும்? 

ஒவ்வொருவரும் 9 முதல் 11 வயதிற்குள் முதல் கொலஸ்ட்ரால் ஸ்கிரீனிங் செய்வது அவசியம் என தேசிய இதயம், நுரையீரல் மற்றும் ரத்தம் நிறுவனம் (NHLBI) பரிந்துரை செய்கிறது. முதல் சோதனைக்கு பிறகு ஒவ்வொரு 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவுகளை பரிசோதிப்பது நல்லது. சுமார் 45 முதல் 65 வயது ஆண்களும், 55 முதல் 65 வயது பெண்களும் 1 முதல் 2 வருடங்களுக்கு ஒருதடவை கொலஸ்ட்ரால் பரிசோதனையை செய்ய வேண்டும். சுமார் 65 வயதுக்கு மேல் உடையவர்கள் வருடம்தோறும் கொலஸ்ட்ரால் பரிசோதனைகளை செய்ய NHLBI வலியுறுத்துகிறது. 

கொலஸ்ட்ரால் அளவு 

கெட்ட கொலஸ்ட்ரால் அளவு - 70 mg/dl கீழ் இருக்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு நல்ல  கொலஸ்ட்ரால் அளவு - 50 mg/dlக்கு அருகில் இருந்தால் நல்லது. ட்ரைகிளிசரைடுகள் - 150 mg/dl-க்கு கீழ் இருக்க வேண்டும். இதெல்லாம் கலந்து மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mg/dl-க்கும் கீழ் இருந்தால் ஆரோக்கியமாக இருக்கிறார் என அர்த்தம்.  ஆண்களுக்கு கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு 40 mg/dl இருக்கலாம், அதற்கு கொஞ்சம் அதிகம் இருந்தாலும் நல்லது தான். குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட நல்ல கொலஸ்ரால் அளவு என்பது 45 mg/dl-க்கும் மேல் இருக்க வேண்டும். குழந்தைகளில் 40 mg/dl  முதல் 45 mg/dl அளவு நல்ல கொலஸ்ட்ரால் இருப்பது விளிம்பு நிலையாகும். ஆனால் குழந்தைகளுக்கு 40 mg/dl என்ற அளவுக்கு கீழ் இருந்தால் குறைந்த நல்ல கொலஸ்ட்ரால் அளவை கொண்டிருப்பதாக அர்த்தம். 

இதையும் படிங்க: ஜீரணம் ஆகாம வயிற்றில் கேஸ், எரிச்சல்.. சாப்பிடும் போதே என்ன பண்ணனும் தெரியுமா?

கெட்ட கொலஸ்ட்ரால் 

கொலஸ்ட்ரால் ரத்தத்தின் மூலம் கொண்டு செல்லப்படும் புரதங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. புரதங்கள், கொலஸ்ட்ரால் ஆகியவற்றின் கலவைதான் லிப்போபுரோட்டீன் (lipoprotein) என அழைக்கப்படுகிறது. லிப்போபுரோட்டீன் எதை எடுத்து செல்கிறது என்பதைப் பொறுத்து இருவகையான கொலஸ்ட்ரால்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL -Low-density lipoprotein) தான் நோய்களுக்கு வித்திடுகிறது. இதை கெட்ட கொலஸ்ட்ரால் என்கிறார்கள். இவை நம் உடல் முழுக்க கொலஸ்ட்ரால் துகள்களை கடத்தி செல்கின்றன. இவை ரத்தம் கடத்தும் தமனிகளின் சுவர்களை கடினமாகவும் குறுகலாகவும் மாற்றுகிறது. அதிகளவு கெட்ட கொலஸ்ட்ரால் இருந்தால் இதய நோய், பக்கவாதம் வரும் அபாயம் அதிகமாகும்.  

கெட்ட கொழுப்பை குறைக்க நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்ணலாம். அவை நல்ல கொழுப்புச்சத்தை உடலுக்கு கொடுக்கும். ஓமேகா 3 அமிலங்கள் நிறைந்த உணவுகள், பழங்கள், கீரைகள், மீன், தானியங்களால் செய்த உணவை உண்ணலாம். தினமும் உடற்பயிற்சி மறக்காமல் செய்யுங்கள். முடியாதவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: மார்ச் மாதம் வந்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பொற்காலம்.. பண மழையில் நனைவார்கள்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios