மாலை நேரத்தில் மந்தமாக இருக்கும்னு பார்த்தால் .. இப்ப மளமளவென உயர்ந்து விட்டதே தங்கம் விலை...! 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, பெரும் மாற்றம் இல்லாமல் கிராமுக்கு ரூ.13 குறைந்து 3885.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 104 ரூபாய் குறைந்து 31 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

மாலை நேர நிலவரப்படி

கிராமுக்கு ரூ.6 உயர்ந்து 3891.00 ரூபாயாகவும், சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து 31ஆயிரத்து 128 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. காலை நேரத்தில்  சற்று குறைந்து இருந்த  தங்கம் விலை, மாலை நேரத்தில் அதிகமாகி உள்ளது.மேலும் சவரன் விலை 32 ஆயிரத்தை தொடும் நிலையில் உள்ளதால், இனி வரும் காலங்களில் தங்கம் வாங்குவது என்பது மிக பெரிய சவாலாக இருக்கும். இருப்பினும் ஏழை குடும்பத்தை சேந்தவர்களுக்கு  ஒரு கிராம் தங்கம் என்பது கூட எட்டா  கனியாக உள்ள நிலை ஏற்பட்டு உள்ளது 

உலக அளவில் மந்தமான வர்த்தக நிலையால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, அதன் காரணமாக தங்கம் விலை உயர்வு கண்ட நிலையில் தற்போது சற்று குறைந்து உள்ளது. மேலும் தற்போதைய நிலவரப்படி, செய்கூலி சேதாரம் என சேர்த்து பார்த்தால் ஒரு சவரன் தங்கம் விலை 36 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

ஒரு கிராம் வெள்ளி 20 பைசா அதிகரித்து 50.10 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.