தற்போதைய நிலவரப்படி, செய்கூலி சேதாரம் என சேர்த்து பார்த்தால் ஒரு சவரன் தங்கம் விலை 35 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக எப்போது தான் சவரன் விலை குறையுமோ என்ற ஆவல் மக்கள் மத்தியில் எழுந்து உள்ளது.
தங்கம் விலையில் இன்று இப்படி ஒரு மாற்றமா..? சவரன் விலை என்ன தெரியுமா..?
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, பெரும் மாற்றம் இல்லாமல் கிராமுக்கு ரூ.4 அதிகரித்து 3866.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 32 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 928 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தங்கத்தின் மீதான இறக்குமதி ரி அதிகரித்த உடன் சவரன் விலை மெல்ல மெல்ல உயர தொடங்கியது. இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, அதன் காரணமாக தங்கம் விலை உயர்வு கண்ட நிலையில் தற்போது சற்று குறைந்து உள்ளது.
மேலும் தற்போதைய நிலவரப்படி, செய்கூலி சேதாரம் என சேர்த்து பார்த்தால் ஒரு சவரன் தங்கம் விலை 35 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக எப்போது தான் சவரன் விலை குறையுமோ என்ற ஆவல் மக்கள் மத்தியில் எழுந்து உள்ளது.
மேலும் வருகிற மாதங்களில் சுப காரியங்கள் அதிகம் நடக்க உள்ளதால், தங்கத்தின் தேவை தவிர்க்க முடியாததாக கருதப்படுகிறது. எனவே மக்களின் தேவையை பொறுத்து தங்கம் விலை மீண்டும் உயர் வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டு உள்ளது .
வெள்ளி விலை நிலவரம்..!
ஒரு கிராம் வெள்ளி 20 பைசா அதிகரித்து 50.00 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 7, 2020, 12:07 PM IST