தங்கம் விலை தொடர் ஏற்றம் கண்டு வருவதால் பொதுமக்கள் பெரும் கவலை தெரிவித்து வருகின்றனர். மேலும் இனி வரும் காலங்களில் திருமண நிகழ்வு அதிகம் நடைபெற உள்ளதால், பெற்றோர்களுக்கு ஒரு விதமான சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

சரசரவென உயர்ந்த தங்கம் விலை...! பெரும் கவலையில் மக்கள்..! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.39 அதிகரித்து 3922.00 ரூபாயாகவும், சவரனுக்கு 312 ரூபாய் அதிகரித்து 31 ஆயிரத்து 376 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, அதன் காரணமாக தங்கம் விலை உயர்வு கண்டது. இந்த நிலையில் தொடர்ந்து விலை உயர்வு அடைவதும், சில சமயத்தில் குறைவதுமாக உள்ளது. இருப்பினும் சவரன் விலை இப்படியே உயர்வு கண்டால் 32 ஆயிரத்தை தொடும் நில உருவாக வாய்ப்பு உள்ளது என்பது. 

ஒரு வேளை சவரன் 32 ஆயிரம் கடக்கும் போது செய் கூலி சேதாரம் என சேர்த்து ஒரு சவரன் விலை 38 ஆயிரம் தொடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

ஒரு கிராம் வெள்ளி 60 பைசா அதிகரித்து 50.90 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.