Tamil

தட்கல் புக்கிங் இனி ஈஸியாகுமா?

தட்கல் டிக்கெட் புக் செய்யும்போது சர்வர் டவுன், பேமெண்ட் ஃபெயில், மெதுவாக லோட் ஆவது போன்ற பல்வேறு சிக்கல்களை பயணிகள் சந்திக்கும் பயணிகளுக்கு ஒரு குட்நியூஸ் காத்திருக்கிறது.

Tamil

புத்தம் புதிய வெப்சைட்

அதிக வேகம் மற்றும் புதிய அம்சங்களுடன் ஐஆர்சிடிசி தனது புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

Image credits: Google
Tamil

புதிய போர்டல் எப்போது வரும்?

இந்த புதிய வெப்சைட், ஆகஸ்ட் இரண்டாவது வாரம் அல்லது சுதந்திர தினத்தை ஒட்டி செயல்படத் தொடங்கலாம். ஆனால், ஐஆர்சிடிசி இன்னும் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை அறிவிக்கவில்லை.

Image credits: Google
Tamil

சர்வர் டவுன் இனி இல்லை?

தட்கல் புக்கிங் நேரத்தில் எரிச்சலூட்டும் பாப்-அப்கள், விளம்பர பேனர்கள் மற்றும் திரும்ப திரும்ப வரும் கேப்ட்சா சரிபார்ப்புகள் இனி குறையும்.

Image credits: Google
Tamil

கட்டணக் காலண்டர் (Fare Calendar)

பல்வேறு நாட்களுக்கான டிக்கெட் கட்டணங்களை ஒரே இடத்தில் பார்க்க 'ஃபேர் கேலண்டர்' வசதி. பயண தேதியில் நெகிழ்வுத்தன்மை உள்ளவர்கள், குறைந்த கட்டணத்தில் டிக்கெட்டுகளைக் கண்டறிய உதவும்.

Image credits: Google
Tamil

பிடித்தமான சீட்டை தேர்ந்தெடுக்கலாம்

புதிய தளத்தில், பயணிகள் புக்கிங் செய்யும்போதே தங்களுக்குப் பிடித்தமான சீட் அல்லது பெர்த்தை தேர்வு செய்ய முடியும். இது தற்போதைய அமைப்பை விட வசதியான அனுபவத்தை வழங்கும்.

Image credits: Google
Tamil

சலுகை டிக்கெட்டும் இனி சுலபம்

மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், நோயாளிகள் போன்ற பிரிவினருக்கான சலுகை டிக்கெட்டுகளையும் புதிய தளம் மூலம் எளிதாக புக் செய்யும் வகையில் அமைப்பு உருவாக்கப்படுகிறது.

Image credits: Google
Tamil

அனைத்து வகுப்புகளும் ஒரே ஸ்கிரீனில்

ஸ்லீப்பர் முதல் ஏசி டூ-டயர் வரை அனைத்து வகுப்புகளிலும் உள்ள சீட் இருப்பை ஒரே திரையில் சரிபார்க்கலாம். பல இந்திய மொழிகளுக்கும் இந்த புதிய வெப்சைட் சப்போர்ட் செய்யும்.

Image credits: Google
Tamil

நிமிடத்திற்கு 1.5 லட்சம் புக்கிங்!

இந்த புதிய தளம் ஒரு நிமிடத்தில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட் புக்கிங் செய்யலாம். இதனால் சர்வர் செயலிழப்பு, புக்கிங் தோல்வி பேமெண்ட் சிக்கல்கள் போன்ற பிரச்சனைகள் குறையும்.

Image credits: Google

இயற்கையான முறையில் திரும்பவும் விழுந்த முடியை வளர வைக்கலாம் தெரியுமா?

Blood Pressure: இந்த 6 காய்கறிகள் இதய ஆரோக்கியத்துக்கும் நல்லது!

Hair Fall: முடி கொட்டுதா? கவலைப்படாதீங்க! இதோ 6 சூப்பர் டிப்ஸ்!

Air Purifying Plants: வீட்டுக் காற்றை சுத்தமாக்கும் 6 சூப்பர் செடிகள்!