Asianet News TamilAsianet News Tamil

சரசரவென குறைந்தது தங்கம் விலை...! சவரன் விலை எவ்வளவு தெரியுமா..?

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, அதன் காரணமாக தங்கம் விலை உயர்வு கண்டது. 

gold rate down as on 29 jan 2020
Author
Chennai, First Published Jan 29, 2020, 2:11 PM IST

சரசரவென குறைந்தது தங்கம் விலை...! சவரன் விலை எவ்வளவு தெரியுமா..? 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.37 குறைந்து உள்ளது. 

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, அதன் காரணமாக தங்கம் விலை உயர்வு கண்டது. இந்த நிலையில் தொடர்ந்து விலை உயர்வு அடைவதும், சில சமயத்தில் குறைவதுமாக உள்ளது. இருப்பினும் சவரன் விலை 31 ஆயிரம்  நெருங்கி உள்ளதால் இதனுடன் செய்க்கோழி சேதாரம் என  சேர்த்து இன்றைய நிலையில்  ஒரு சவரன் வாங்க  வேண்டும் என்றால் 34 முதல் 35 ஆயிரம் ருபாய் நிலை உள்ளது. 

gold rate down as on 29 jan 2020

தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.37 குறைந்து 3838.00 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 296 குறைந்து 30 ஆயிரத்து 704 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

வெள்ளி விலை நிலவரம்..! 

ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் குறைந்து 49.00 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios