காலை நேர நிலவரப்படி தங்கம் விலை குறைவு..! 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றும் கிராமுக்கு ரூ.5 குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.5 குறைந்து 3961ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 31 ஆயிரத்து 688 ரூபாய்க்கும் விற்பனையாகிறது 

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 60 பைசா உயர்ந்து 40.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா எதிரொலியால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் விளைவாக தங்கத்தின் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தங்கம் விலை தொடர் ஏற்றம் அடைகிறது.

கொரோனா எதிரொலியால் ஒட்டுமொத்தமாக பொருளாதாரமே முடங்கி உள்ளது. இந்த நிலையில்தங்கம்  வாங்க வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தாலும் வாங்குவதாற்கான சாதராண சூழல் இப்போது இல்லை என்பதே குறிப்பிடத்தக்கது.