தங்கம் விலை குறைவு..! எவ்வளவு ரூபாய் என தெரிந்தால் டென்ஷனாகும்..! 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று காலை கிராமுக்கு ரூ.35 அதிகரித்து உள்ளது. தங்கத்தின் மீதான விலை சற்று குறையும் என எதிர்பார்க்கும் தருணத்தில், மீண்டும் உயர்ந்து உள்ளதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.35 உயர்ந்து 4216 ரூபாய்க்கும், சவரனுக்கு 33 ஆயிரத்து 728 ரூபாய்க்கும் விறக்கப்பட்டது.

மாலை நேர நிலவரப்படி..!

கிராமுக்கு ரூ.2 குறைந்து 4214.00 ரூபாயாகவும், சவரனுக்கு ரூ.8 குறைந்து 33 ஆயிரத்து 712 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம் 

வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயர்ந்து 50.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மனதை நிலை,கொரோனா வைரஸ் எதிரொலி உள்ளிட்ட காரணத்தினால்  தொடர்ந்து தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதால், தங்கம் விலை உயர காரணம் என வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். 

ஆனால் தங்கம் விலை உயரும் போது மட்டும், கிராமுக்கு ரூ.30, ரூ.40 என விலை குறையும் போது  மட்டும் வெறும் ரூ.2, ரூ.5, ரூ.10 என குறைகிறதே என மக்கள் விமர்சனம் செய்கின்றனர்.