காலைல இஞ்சி டீயா? இனி இஞ்சி, எலுமிச்சை பானம் குடிங்க!! பலரும் அறியாத அற்புத பலன்கள்
Energy Boosting Drink In Morning : காலையில் இஞ்சி சாறு, எலுமிச்சை, தேன் ஆகிய மூன்றும் கலந்து குடிப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
நாம் எந்த வேலையை செய்பவராக இருந்தாலும் சுறுசுறுப்பாக செயல்பட உடலுக்கு ஆற்றல் தேவை. ஒருவர் சத்தான உணவுகளை சாப்பிட்டு தெம்பாக இருந்தால் நாள் முழுக்க கூட உற்சாகமாக வேலை செய்ய முடியும். உடல் உறுதி தான் ஒருவருடைய சுறுசுறுப்பிற்கு காரணமாக அமைகிறது.
ஒருவருடைய காலை உணவு ஆரோக்கியமாக அமைந்தால் அன்றைய நாள் முழுக்க உற்சாகமாக செயல்படும் ஆற்றல் அவருக்கு கிடைக்கும். காலையில் சாப்பிட்டு விட்டு வேலை செய்வதற்கும், பட்டினியாக வேலை செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. நம்மில் பலர் காலை எழுந்ததும் டீ அல்லது காபி அருந்திவிட்டு வேலையை தொடங்குகிறோம். ஆனால் இது உடலுக்கு அந்த அளவுக்கு ஆரோக்கியம் கிடையாது. சர்க்கரை கலக்காத மூலிகை தேநீர் அருந்துவது உடலை பேண நமக்கு உதவுகிறது. குறிப்பாக இஞ்சி, எலுமிச்சை, தேன் போன்றவற்றை கலந்து அருந்துவதால் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலை பெற முடியும்.
இதையும் படிங்க: வெறும் வயிற்றில் இந்த '5' பொருள்களை சாப்பிடுங்க; சுகர் கண்ட்ரோலா இருக்கும்!
எப்படி தயார் செய்ய வேண்டும்?
இஞ்சியை நசுக்கி ஐந்து மில்லி சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதே அளவு எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளுங்கள். இவற்றை இளம்சூடான வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதில் சுவைக்காக தேன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த அற்புத பானத்தை தினமும் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் கிடைப்பது மட்டுமின்றி வாய்வு தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்.
இதையும் படிங்க: தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த நாலு ஹெல்தி ட்ரிங்க் குடிங்க.. சருமம் பளபளப்பது உறுதி!
இஞ்சி - எலுமிச்சை நன்மைகள்:
இஞ்சியும் எலுமிச்சையும் சேர்த்து எடுத்துக் கொள்வதால் வயிறு உப்புசம், வாயு தொல்லை போன்ற பிரச்சனைகள் நீங்கும். எலுமிச்சை சாறு உங்களுடைய செரிமான மண்டலத்தை தூண்டக்கூடும். இனி உங்களுடைய செரிமான பாதையில் வீக்கத்தைக் குறைக்கும். எலுமிச்சை பழத்தில் உள்ள வைட்டமின் சி உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இஞ்சியில் உள்ள கிருமி நாசினி பண்புகள் நுண்கிருமி தாக்கத்தில் இருந்து உங்களை பாதுகாக்கும். நோயெதிர்ப்பாற்றலை தரும்.
இஞ்சி உங்களுடைய வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து பசியை குறைக்கும். அதே நேரத்தில் எலுமிச்சை உங்களுடைய செரிமானத்தை மேம்படுத்தி எடையை குறைப்பதில் உதவி புரியும். இஞ்சி உங்களுடைய பொடுகு தொல்லை குறைய உதவும். இதனால் முடி வளர்ச்சி அதிகமாகும். எலுமிச்சை தோல் சுருக்கத்தை குறைத்து உங்களை இளமையாக வைத்திருக்க உதவும்.
இஞ்சி மற்றும் எலுமிச்சையின் மணம் உங்களுடைய பதற்றத்தை குறைத்து மன நலனை நன்றாக வைத்திருக்க உதவும். இஞ்சியில் உள்ள இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் சுவாசப்பாதை வீக்கத்தை குறைக்கும். சுவாசப் பிரச்சனைகளை நீக்கும்.