தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த நாலு ஹெல்தி ட்ரிங்க் குடிங்க.. சருமம் பளபளப்பது உறுதி!

Healthy Drinks For Glowing Skin : தினமும் காலை வெறும் வயிற்றில் சில சிறப்பு பானங்களை குடித்து வந்தால், உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மேலும் உங்கள் சருமமும் பளபளப்பாக மாறும்.

best healthy morning drinks for healthy and glowing skin in tamil mks

காலையில் குடிக்கும் ஆரோக்கியமான பானம் நம் ஆரோக்கியத்திற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது தெரியுமா? மேலும், காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரை குடிப்பது நமது வளர்சிதை மாற்றம் மற்றும் வயிற்று மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக, காலையில் ஒன்று அல்லது இரண்டு லிட்டர் தண்ணீர் குடித்தால் உடலில் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சருமம் தெளிவாகவும் இருக்கும்.

தண்ணீரைத் தவிர, சில ஆரோக்கியமான பானங்களை காலை எழுந்தவுடன் குடித்தால், உங்கள் முழு உடலையும், உங்கள் சருமத்தையும் சுத்தம் செய்யும். ஆகையால், நீங்கள் பளபளப்பான சருமத்தை பெற விரும்பினால், இந்த சிறப்பு பானங்களுடன் உங்கள் நாளை தொடங்குங்கள். எனவே, அவற்றைப் பற்றி இப்போது இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

பளபளப்பான சருமத்திற்கு ஆரோக்கியமான பானங்கள்:

1. தேன் மற்றும் எலுமிச்சை நீர்:
எலுமிச்சை நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல், எடையை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, இந்த நீரானது சருமத்திற்கு ஈரப்பதை வழங்குகிறது. தேனில் வயதான எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும்,  இது புதிய செல்களை உருவாக்கும். எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. இதுவும் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும்.

2. ஆரோக்கியமான ஜூஸ்:
தினமும் காலை ஏதாவது ஒரு ஆரோக்கியமான ஜூஸ் குடித்து வந்தால் சருமம் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமின்றி, பளபளப்பாகவும் இருக்கும். இதற்கு நீங்கள் பீட்ரூட் கேரட் அல்லது மாதுளை போன்றவை ஜூஸ் ஆகா குடிக்கலாம். இவற்றில் ஏராளமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. அவை முகப்பருவை தடுக்கவும், ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்தவும் உதவிகின்றது. கேரட், பீட்ரூட்டில் வைட்டமின் ஏ உள்ளது. இது முகப்பரு சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளை தடுக்கிறது மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.

3. கிரீன் டீ:
தினமும் காலையில் கிரீன் டீ -யில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் முகப்பருவிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். இதனால் சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

4. மஞ்சள் பால்:
மஞ்சள் ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, தினமும் காலையில் பாலில் சிறிது அளவு மஞ்சள் கலந்து அதை குடித்து வந்தால் சருமம் எப்போதும் ஆரோக்கியமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios